தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்த அசாம் பாஜக அரசு : 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!

9 Oct 2026, 10:33 pm
சிபிஎம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்த அசாம் பாஜக அரசு : 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!

சிபிஎம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்த அசாம் பாஜக அரசு : 2,000-க்கும் மேற்பட்டோர் கைது!

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் மேலப்பகுதி (மேல் அசாம்) கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணமும் மறுவாழ்வும் அளிக்காமல், ‘ஊடுருவல்காரர்களை வெளியேற்றுகிறோம்’ என்ற பெயரில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் நாடு கடத்தும் (வங்கதேசத்திற்கு) வேலைகளை மட்டுமே ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மேல் அசாம் பகுதி மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்; பேரழிவிற்கான காரணங்களைக் கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும்; மழையால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க வடகிழக்கு வெள்ள மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும்; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்களைச் சட்டவிரோதமாக நீக்கியதற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 7 அன்று கவுகாத்தியில் ‘திஸ்பூர் நோக்கி அணிவகுப்பு’ (March to Dispur) என்ற பெயரில் போராட்டத்தை நடத்தியது.

காவல்துறையின் தாக்குதலும் கைதும்

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கவுகாத்திக்கு வருகை தந்தனர். எனினும், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் காவல்துறை பொது இடங்களில் கூடுவதற்கும் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகளை (பிஎன்எஸ் 163 தடை உத்தரவு - 144 தடை உத்தரவுக்குப் பதில்) விதித்ததுடன், நகரத்தின் முக்கிய நுழைவாயில்களைத் தடுப்புகளைக் கொண்டு அடைத்தது. அதேசமயம், போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் பல்வேறு இடங்களில் வழிமறிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்; பல இடங்களில் காவல்துறை கொடூரமான தாக்குதல்களை நடத்தியது. எனினும், தடையை மீறிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட சிபிஎம் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அசாமிலும் ‘பெயர் அட்டை’ இல்லாத காவல்படை!

தில்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வீதிகளில் இளைஞர்கள், மாணவர்கள், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் போராட்டம் நடத்தும்போது, ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை பெரும் படையுடன் களமிறங்குகிறது. அவ்வாறு களமிறங்கும் காவல்துறையினரின் சீருடையில் ‘பெயர் அட்டை (Nametag/Badge)’ இருப்பதில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டபோது, “போராட்டம் முடிந்தவுடன் பெயர் முகவரியைக் கொண்டு காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவே பெயர் அட்டை இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அமித் ஷா அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. தற்போது தில்லியைப் போலவே, பாஜக ஆளும் அசாமிலும் ‘பெயர் அட்டை’ இல்லாத காவல்படையே போராட்டக்காரர்களை ஒடுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.