முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான மதவெறி அச்சுறுத்தல் அசாம் பாஜக முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
11 Feb 2026, 2:34 pm
<p><strong>முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான மதவெறி அச்சுறுத்தல் அசாம் பாஜக முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!</strong></p>
<p>தலைநகர் தில்லியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் புதுதில்லி, பிப். 11 - அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பதவிநீக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் முஸ்லிம் இளை ஞர்களைக் குறிவைத்து சுடுவது போன்ற வீடியோ அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில், ‘அந்நியர்கள் இல்லாத அசாம்’, ‘கருணை கிடையாது’, ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை?’ என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறுப்பு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு துப்பாக்கியால் சுடும் அளவிற்கு கொடூரமான மத வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. எனினும், பாஜக-வானது இதுவரை ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையிலேயே, ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ஆட்சேபகரமான வீடியோவைக் கண்டித்தும், அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் புதுதில்லியில் உள்ள நாடா ளுமன்ற வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத் பேசு கையில், “இந்த நிகழ்வு முஸ்லிம் சிறு பான்மையினருக்கு எதிரான ஒரு தாக்குதல் மட்டுமல்ல, நம் அரசிய லமைப்புச் சட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குச் சமம்!” என்று கூறி னார். “அரசியலமைப்புச் சட்ட பதவி யில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற வன்முறை மற்றும் மதவெறி நஞ்சை பகிரங்கமாக உமிழ்வது நாட்டின் ஜன நாயக மற்றும் மதச்சார்பற்ற கட்ட மைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறிய பிருந்தா காரத், “இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, முதல மைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து, உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் நிலோத்பால் பாசு பேசுகையில், “வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் ஒருவர், முதலமைச்ச ராக தொடர்வதற்கான அனைத்து தார்மீக அதிகாரத்தையும் இழந்து விட்டார்” என்று கூறினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லேவும் உரையாற்றினார். (ந.நி.)</p>
