தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியிட்ட அசாம் பாஜக முதல்வர்

8 Feb 2026, 3:06 pm
முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியிட்ட அசாம் பாஜக முதல்வர்
<p><strong>முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியிட்ட அசாம் பாஜக முதல்வர் </strong></p> <p>பாஜக ஆளும் அசாம் மாநில &nbsp;முதலமைச்சராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. ஊழல் நடவடிக்கை மிரட்டலால் காங்கி ரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றவர். இந்நிலையில், பாஜக தனது அதி காரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், பாயிண்ட் பிளாங்க் ஷூட் (Point blank &nbsp;shoot)&rdquo; என்ற தலைப்பில் அசாம் முதல மைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா துப்பாக்கி யால் சுடுவது போன்ற உண்மையான காட்சிகளுடன், முஸ்லிம்களைப் பிரதி பலிக்கும் வகையில் தாடி மற்றும் குல்லா &nbsp;அணிந்த நபர்களின் ஏஐ மூலம் உரு வாக்கப்பட்ட உருவங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களை &nbsp; துப்பாக்கியால் சுடுவது போன்ற விளக் கத்துடன் வீடியோ வெளியிடப்பட்டன. இந்த வீடியோவிற்கு அரசியல் கட்சிகள், &nbsp;சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பின. இதனால் மிரண்டு போன பாஜக பதிவை &nbsp;நீக்கியது. தலைவர்கள் கண்டனம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா ளர் கே.சி. வேணுகோபால்,&rdquo;இது இனப் படுகொலைக்கான அழைப்பு. ஆகும். குறிப்பாக இது ஏதோ சாதாரண ட்ரோல் &nbsp;வீடியோ அல்ல, அதிகார மட்டத்தில் இருந்து பரப்பப்படும் விஷம்&rdquo; என கண்ட னம் தெரிவித்தார். அதே போல திரிணா முல் காங்கிரஸ் எம்.பி., சாகரிகா கோஷ், &rdquo;இது வன்முறையைத் தூண்டும் செயல். &nbsp;வீடியோ வெளியிட்ட பாஜக மீது உபா கீழ் &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்று வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.