மனைவிக்கு 3 நாடுகளின் பாஸ்போர்ட்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக பவன் கேரா மீது காவல்துறையை ஏவிய அசாம் பாஜக முதலமைச்சர்
7 Apr 2026, 5:38 pm

மனைவிக்கு 3 நாடுகளின் பாஸ்போர்ட்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக பவன் கேரா மீது காவல்துறையை ஏவிய அசாம் பாஜக முதலமைச்சர்

புதுதில்லி அசாம் மாநில முதலமைச்ச ராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இவரது மனைவி ரினிகி புயான் சர்மா ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகு வா மற்றும் பார்புடாஸ், எகிப்து ஆகிய மூன்று நாடுகளால் வழங் கப்பட்ட செயலில் உள்ள பாஸ் போர்ட்டுகளை வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஞாயி றன்று குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”இந்தியச் சட்டம் இரட்டை குடியுரிமையை அனு மதிப்பதில்லை. அப்படியிருக்கை யில் ஒரு இந்தியக் குடிமகன் எப்படி பல வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டு களை வைத்திருக்க முடியும்? ரினிகி புயான் சர்மாவிடம் இந்தி யக் குடியுரிமைதான் இருக்கிறதா? முஸ்லிம்களுக்கு எதிரான அரசி யலை முன்னெடுக்கும் ஒரு முதல மைச்சரின் மனைவி, எப்படி இரண்டு முஸ்லிம் நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள் ளார். அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் ‘ரினிகி புயான் சர்மா அசெட் கலெக்டிவ் எல்.எல்.சி (Riniki Bhuyan Sarma Asset Collective LLC) என்ற பெயரில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதன் விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப் பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. வயோமிங் மாகாணத்தில் வருமான வரி கிடையாது என்ப தால், சொத்துக்களைப் பாதுகாக்க வும் வரி ஏய்ப்பு செய்யவும் அங்கு நிறுவனம் தொடங்கப்பட்டது” என அவர் குற்றம்சாட்டினார். கோகோய் சரமாரி கேள்வி தொடர்ந்து திங்களன்று ரஹாவில் (அசாம்) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய்,“அரசியல் எதிரிகளைப் பற்றி பொய்களைப் பரப்பும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது மற்றும் மனைவியின் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வணிக நலன்களை மறைக்கிறாரா? சர்மாவின் மனைவிக்கு மூன்று வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் உள்ளனவா? துபாயில் சொத்து வைத்துள்ளாரா? அமெரிக்காவில் நிறுவனங்கள் உள்ளனவா? அல்லது ஷெல் நிறுவனங்களில் சொத்துக்களை முதலீடு செய் துள்ளாரா? பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதிலளிக்கத் தயாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். வெறுப்புப் பதில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா,”காங்கிரஸ் கூறிய புகார் கள் அனைத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சமூக ஊடகக் குழு பரப்பிய தவறான தகவல்கள் ஆகும். அடுத்த 48 மணி நேரத்திற் குள் பவன் கேரா மீது சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்படும்” என குற்றச்சாட்டுக ளுக்கு மழுப்பலாக மறுப்பு தெரி வித்து, மிரட்டல் விடுத்தார். காவல்துறை தொடர்ந்து செவ்வாயன்று அசாம் காவல்துறையினர் பவன் கேராவின் தில்லி இல்லத்திற்கு விசாரணைக்காக திடீரென வந்தனர். தில்லிக்கு வருகை தந்தது குறித்து உள்ளூர் காவல்துறைக்கு அவர்கள் முறையாகத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொ டர்ந்து பவன் கேராவை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கை யில் தில்லி காவல்துறையினரும் இறங்கினர். ஆனால் பவன் கேரா தில்லி இல்லத்தில் இல்லை. அவர் பிரச்சார வேலையாக வெளியில் சென்று இருந்தார். இதனால் அசாம் - தில்லி காவல்துறையினர் பவன் கேரா இல்லத்தின் வாசலி லேயே நீண்ட நேரம் நின்று கொண்டு சென்றுவிட்டனர். தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அசாம் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியதைத் தொடர்ந்து, பவன் கேரா அங்கிருந்து ஹைதராபாத்திற்கு தப்பியோடிவிட்டார் என்று முதல மைச்சர் சர்மா குற்றம் சாட்டினார்.