தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

9 Aug 2026, 9:58 pm
விளையாட்டு

விளையாட்டு

கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் இந்திய வீராங்கனை அஸ்மிதா சாம்பியன்

தென் கொரியாவில் நடைபெற்று வந்த முன்னணி பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான “கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300” தொடர் ஞாயிறன்று நடைபெற்றது. இது பிடபிள்யூஎப்உலகச் சுற்றுப்பயண தொடர் ஆகும்.

இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா சீனாவின் ஹான் கியான்ஷியை எதிர்கொண்டார். தொடக்கத்தில் அஸ்மிதா புள்ளிகளை குவிக்க முடியாமல் திணறி, முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் இழந்தார். எனினும் 2ஆவது செட் முதல் உத்வேகம் பெற்ற அஸ்மிதா, அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 3ஆவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை அஸ்மிதா சாம்பியன் பட்டம் வென்றார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அஸ்மிதாவிற்கு இது முதல் பிடபிள்யூஎப் உலகச் சுற்றுப்பயணப் பட்டம் ஆகும்.

உலக இளையோர் தடகளம் : இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கம்

20 வயதுக்குட்பட்டோருக் கான உலக இளையோர் தடகளசாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சனியன்று இரவு நடைபெற்ற ஆடவர் உயரம்தாண்டுதல், நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியா 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

வசந்த் குமார்

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் வசந்த் குமார் மேக்வால் 2.21 மீட்டர் தாவி இரண்டாம் பிடித்தார். 2.21 மீட்டருக்கு மேல் தாவிய அல்ஜீரியாவின்யூனிஸ் அயாச்சி தங்கப்பதக்கத்தை யும், பிரிட்டனின் ஓடிஸ் வெண்கலப் கதக்கத்தையும் வென்றனர்.இந்த வெற்றி தொடர்பாக வசந்த் குமார் கூறுகையில், “2.24 மீட்டருக் கான கடைசி முயற்சியின்போது நான்சற்று பதற்றமாக இருந்தேன். அதனால் என்னால் இலக்கை எட்ட முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. இனி வரும் சீனியர் போட்டிகளில் நான் இன்னும் சிறப்பாகச் செயல்படுவேன்” என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஷாநவாஸ் கான்

ஆசிய நீளம் தாண்டுதல் சாம்பியனான இந்தியாவின் ஷாநவாஸ் கான் உலக ஜூனியர் தடகள தொடரில் தனது சிறந்த முயற்சியாக 7.84 மீட்டர்தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். குறிப்பாக, உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் நீளம்தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல்இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இத்தாலியின் டேனியல் லியொனார்டோ இன்சோலி 7.97 மீட்டர் தூரம் குதித்து தங்கப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் மேசன் மெக்ரோடர் 7.96 மீட்டர் தூரம் குதித்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

ஷாநவாஸ் கான் மற்றும் வசந்த் குமார் மேக்வாலின் பதக்கங்களோடு, வெள்ளிக்கிழமை ஈட்டி எறிதலில் ஆஷிஷ் யாதவ் வென்ற வெள்ளிப்கதக்கத்தையும் சேர்த்து, உலக தடகளசாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் : மதுரை - சேலம் அணிகள் இன்று பலப்பரீட்சை

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் (டிஎன்​பிஎல்) 10ஆவது சீசன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 28 வரை நடைபெறும் இந்த தொடரின் 11ஆவது லீக் ஆட்​டத்​தில் மதுரை - சேலம் அணிகள்மோதுகின்றன.

மதுரை - சேலம்நேரம் : இரவு 7:30 மணி இடம் : என்பிஆர் கல்லூரி, நத்தம், திண்டுக்கல் (நத்தம்-திண்டுக்கல் சாலையில் உள்ளது-புன்னப்பட்டி நிறுத்தம்) சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஓடிடி) டிக்கெட் :

என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.

என்ற லிங்கை கிளிக் செய்யலாம். (ரூ.200 முதல் ரூ.500 வரை மட்டுமே - கேலரியை பொறுத்து விலை)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.