தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்மட்ட நடைபாலத்தை கல்லூரி மாணவிகள் பயன்படுத்த ஆசியர்கள் அறிவுறுத்த வேண்டும்!

20 Mar 2026, 2:55 pm
உயர்மட்ட நடைபாலத்தை கல்லூரி மாணவிகள் பயன்படுத்த ஆசியர்கள் அறிவுறுத்த வேண்டும்!
<p><strong>உயர்மட்ட நடைபாலத்தை கல்லூரி மாணவிகள் பயன்படுத்த ஆசியர்கள் அறிவுறுத்த வேண்டும்!</strong></p> <p>தருமபுரி, மார்ச் 20- காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் அபாயகர மான முறையில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வ தால், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்திலுள்ள அரசு மகளிர் &nbsp;கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2013 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. இக்கல்லுாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவி கள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகம், சேலம் - பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. தரும புரி மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளிலிருந்து, அரசு &nbsp;மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கல்லூரிக்கு மாணவிகள் வந்து செல்கின்றனர். பலர் விடுதிகளில் தங்கி படித்து வருகின் றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகள், தேசிய நெடுஞ்சாலையை அபாயகரமான முறையில் கடந்து செல் வதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை யின் குறுக்கே உயர்மட்ட நடைபாலம் அமைக்கபட்டது. இந் நிலையில், நடை மேம்பாலம் அமைக்கபட்ட பின்னரும், மாண விகள் பாலத்தை பயன்படுத்தாமல், மீண்டும் அபாயகரமான முறையில் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதன் காரணமாக, அதிவேகமாக வரும் வாகனங்களால், மாணவி கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காலை &nbsp;மற்றும் மாலை நேரங்களில் மாணவிகள் நடை மேம்பாலத்தை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என மாண விகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.