தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குஜராத் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் போர்க்கொடி அடிப்படை உரிமைகளுக்காகப் புலம்பெயர் தொழிலாளர்கள் கிளர்ச்சி!

11 May 2026, 10:46 pm
குஜராத் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் போர்க்கொடி அடிப்படை உரிமைகளுக்காகப் புலம்பெயர் தொழிலாளர்கள் கிளர்ச்சி!

குஜராத் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் போர்க்கொடி அடிப்படை உரிமைகளுக்காகப் புலம்பெயர் தொழிலாளர்கள் கிளர்ச்சி!

வேலைநிறுத்தம் 10

தஹேஜ், மே 11- இந்தியாவின் பெயிண்ட் தொழில்துறையில் அசைக்க முடியாத ஏகபோக சக்தியாகத் திகழும் ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) நிறுவனத்தின் குஜராத் மாநிலத் தொழிற்சாலைகளில், உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான புதியதொரு போராட்டக் கனல் மூண்டுள்ளது. பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் திரண்டு வருவதன் அடையாளமாக ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் பார்க்கப்படுகிறது.

இத்தொடரின் 10-ஆவது பகுதியில், குஜராத்தின் தொழில் மையங்களில் ஒன்றான தஹேஜ் (Dahej) பகுதியில் வெடித்த இந்தப் போராட்டத்தின் விபரங்களைக் காண்போம்.

குஜராத் மாநிலம் பரூச் (Bharuch) மாவட்டத்தில் உள்ள தஹேஜ் பகுதியில் அமைந்துள்ள ஏசியன் பெயிண்ட்ஸ் ஆலை வளாகத்தில், கடந்த பிப்ரவரி 27 அன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் தன்னிச்சையான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “எட்டு மணி நேர வேலை” மற்றும் “கண்ணியமான ஊதியம்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஆலையின் நுழைவாயிலில் திரண்ட நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

சுரண்டப்படும் ஒப்பந்த உழைப்பு ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 11,100 நிரந்தரப் பணியாளர்களையும், சுமார் 22,500 ஒப்பந்தப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

அதாவது, நிறுவனத்தின் உழைப்புச் சக்தியில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களையே நம்பியுள்ளது.

• நீட்டிக்கப்பட்ட வேலை நேரம்: 8 மணி நேர வேலை என்பது சட்டப்பூர்வ உரிமையாக இருந்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவ்வித கூடுதல் ஊதியமுமின்றி 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

• புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்: தஹேஜ் மற்றும் அங்கலேஷ்வர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களே அதிகம் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை எனத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

• பாதுகாப்பற்ற சூழல்: வேதிப்பொருள் மற்றும் பெயிண்ட் தயாரிக்கும் ஆலைகளில் நிலவும் அபாயகரமான சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு உபகரணங்களோ, முறையான மருத்துவ வசதிகளோ ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

டிஜிட்டல் வழியாகப் பரவும் போராட்டக் குரல் வழக்கமான தொழிற்சங்கக் கட்டமைப்புகள் இல்லாத நிலையிலும், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளைச் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பதிவு செய்தனர்.

பிப்ரவரி 27 அன்று இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்களில் பரவிய போராட்டக் காட்சிகள், ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாகத்தின் போலி பிம்பத்தைத் தோலுரித்துக் காட்டின.

ஐஓசிஎல் (IOCL) பானிபட் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட வடஇந்தியாவின் இதர பகுதிகளில் நிலவும் தொழிலாளர் கொந்தளிப்பின் ஒரு பகுதியாகவே இந்தப் போராட்டமும் பார்க்கப்படுகிறது. ஏகபோக நிறுவனமும் - அடிமைமுறையும் இந்தியாவின் அலங்காரப் பெயிண்ட் சந்தையில் 80 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், சுமார் ₹1 லட்சம் கோடி விற்றுமுதல் (Turnover) ஈட்டுகிறது.

1983-இல் தொடங்கப்பட்ட அங்கலேஷ்வர் ஆலை மட்டும் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 12 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இவ்வளவு பெரிய லாபம் ஈட்டும் நிறுவனம், தனது வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பது கார்ப்பரேட் அராஜகத்தின் உச்சமாகும்.

வரலாற்றுப் பின்னணியும் தற்போதைய மாற்றமும் முன்பு ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் கடலூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (தமிழ்நாடு) ஆலைகளில் வலுவான தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், குஜராத் ஆலைகள் நீண்டகாலமாக அமைதியாகவே இருந்து வந்தன.

தற்போது தஹேஜ் ஆலையில் வெடித்துள்ள இந்தக் கிளர்ச்சி, குஜராத்தின் ‘அமைதியான தொழில் சூழல்’ என்பது தொழிலாளர்களின் குரலை நசுக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபித்துள்ளது.

நிர்வாகம் “வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை” (No work, no pay) போன்ற மிரட்டல்களை விடுத்தாலும், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் காட்டும் இந்த உறுதி, வடஇந்தியா முழுவதும் ஒரு புதிய வர்க்கப் போராட்ட அலை வீசுவதை உறுதிப்படுத்துகிறது. லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.