தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

28 Sept 2026, 8:57 pm
ஆசிய  விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம்!

‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின்ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில்,மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தின் இறுதிச் சுற்று திங்களன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ், பந்தயத்தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து 3ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரகவீராங்கனை மரியம் கரீம் (54.31 விநாடிகள்) தங்கப் பதக்கத்தை யும், கஜகஸ்தான் வீராங்கனை அடீலினா (54.58 விநாடிகள்) வெள்ளிபதக்கத்தையும் வென்றனர்.

பி.டி. உஷாகோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் (54.75 விநாடி), பி.டி. உஷாவின் 42 ஆண்டு காலதேசியசாதனையையும் தகர்த்துள்ளார். பி.டி. உஷாவின் 55.42 விநாடிகள் சாதனை என்பது இந்திய விளையாட்டு வரலாற்றில் நீண்டகாலமாக முறியடிக்கப்படாமல் இருந்துவந்த தேசிய சாதனையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

குராஷ் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு வெண்கலம்

மேலாடை (ஜாக்கெட்) அணிந்து விளையாடும் குராஷ் மல்யுத்தப் போட்டியின் மகளிர் 78 கிலோ பிரிவு அரையிறுதி ஆட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிங்கி பல்ஹாரா - தென் கொரியாவின் சுமின் மோ ஆகியோர் மோதினர்.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சுமின் மோ 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். எனினும் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹாராவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

பாரூல் சவுத்ரிக்கு இரட்டை வெண்கலம்

மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பாரூல் சவுத்ரி வெண்கலப்பதக்கம் வென்றார். 7.5 சுற்றுகளில் 28 நிலையான பெரிய தடைகளையும், 7 நீர் தாண்டும் தடைகளையும் கடந்த பாரூல் சவுத்ரி 9:08.67 நிமிடத்தில் 3ஆவது இடம்பிடித்தார். இந்த பிரிவில் பஹ்ரைன் வீராங்கனை யாவி (9:04.36) தங்கப்பதக்கமும், கஜகஸ்தான் வீராங்கனை நோரா (9:06.82) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

பதக்கப் பட்டியல் மாலை 6.30 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 130 53 45 228

2. ஜப்பான் 41 68 62 171

3. தென்கொரியா 21 26 43 90

4. உஸ்பெகிஸ்தான் 12 17 13 42

5. கஜகஸ்தான் 9 13 23 45

12. இந்தியா 4 20 21 45

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.