தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

27 Sept 2026, 8:55 pm
ஆசிய  விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஸ்குவாஷில் இந்தியாவிற்கு இரட்டை வெள்ளிப்பதக்கம்

மினி ஒலிம்பிக் என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் தொடங்‌கியது. அதைத் தொடர்ந்து பதக்கப் போட்டிகள் செப்.20 அன்று தொடங்கின. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டங்கள் ஞாயிறன்று நடைபெற்றன. இந்த இறுதிப்போட்டிகளில் இந்தியாவின் அபய் சிங், வளரும் இளம் நட்சத்திரமான அனஹத் சிங் ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

18 வயதில் பதக்கம்

ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் வெற்றிக்காக கடுமையாகப் போராடிய போதிலும் மலேசியாவின் எங் ஈன் யோவிடம் 3-0 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதேவேளையில், மகளிர் இறுதிப் போட்டியில் 18 வயதான அனஹத் சிங், மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்திடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். சிவசங்கரி இந்திய வம்சாவளி மலேசியர் ஆவார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு வீரருக்கு வெண்கலம்

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா - செந்தில் குமார் வேலவன் ஜோடி, ஹாங்காங் சீனாவின் லீ - டாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 11-10 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடி கைப்பற்றினாலும், 2ஆவது செட்டை 11-2 என்ற கணக்கில் மிரட்டல் பதிலடியுடன் இந்திய ஜோடி கைப்பற்றியது.

எனினும் வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது செட்டில் இந்திய அணி கடுமையாகப் போராடிய போதிலும், 11-10 என்ற கணக்கில் ஹாங்காங் அணி வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி வரை முன்னேறியதால் ஜோஸ்னா சின்னப்பா - செந்தில் குமார் வேலவன் ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதில் செந்தில் குமார் வேலவன் தமிழ்நாட்டைச் (சேலம்) சேர்ந்தவர் ஆவர்.

நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அன்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் (டெக்லத்தான்) இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

பதக்கப் பட்டியல் மாலை 6.30 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 118 48 38 204

2. ஜப்பான் 37 60 57 154

3. தென்கொரியா 20 23 39 82

4. உஸ்பெகிஸ்தான் 10 17 11 38

5. கஜகஸ்தான் 9 10 21 40

12. இந்தியா 4 16 17 37

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.