ஆசிய விளையாட்டுப் பதக்க வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
3 Oct 2026, 12:38 am

ஆசிய விளையாட்டுப் பதக்க வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, அக். 2 –ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்குச் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் தங்களது சக வீரர்களைவரவேற்றனர். நிதி அமைச்சர் மரிய வில்சன் சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், அபிநயா ராஜராஜன், விஷால் தென்னரசு, போல் வால்ட் வீராங்கனை பரணிகா இளங்கோவன், கிரிக்கெட் வீராங்கனைகமலினி, பேட்மிண்டன் வீரர் ஹரிஹரன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 2 தங்கம், 3 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளனர்.

முதலமைச்சரின் உத்தரவுப்படி, ஆசிய விளையாட்டுக்குச் சென்ற 37 வீரர்களுக்குத் தலா ரூ.7 லட்சம் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டதுடன், பதக்கம் வென்றோருக்கான உயரிய ஊக்கத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி, கமலினிக்கு ரூ.75 லட்சம், விஷால் மற்றும் அபய் சிங் ஆகியோருக்குத் தலா ரூ.80 லட்சம், ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்குத் தலா ரூ.60 லட்சம், அபிநயா, பரணிகா இளங்கோவன், ராஜேஷ் ரமேஷ், ஹரிஹரன், ஷமீனா ரியாஸ் உள்ளிட்டோருக்குத் தலா ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.6.60 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.