ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
2 Oct 2026, 8:37 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி

மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்ற இந்திய மகளிர் அணி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஹாக்கியில், இந்தியா தங்கம் வென்றுள்ளது.

மேலும் இந்தத் தங்கப் பதக்க வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்!

‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது.

தற்போது இத்தொடர் இறுதிக்கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவு இறுதி

ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் - சீனாவின் பாவோ ஜியி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி

னர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.

சீனாவின் பாவோ ஜியி வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தான் (நடாலியா), வியட்நாம் (லு தியம்) வீராங்கனைகள் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

முதல் தங்கம்

ஒலிம்பிக் பதக்க நாயகியான லவ்லினா போர்கோஹைன் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குஷ்,

பர்வீனுக்கும் தங்கம்

ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அங்குஷ் - தென் கொரியாவின் கிம் ஆகியோர் மோதினர். தொடக்கம்முதலே அதிரடி பஞ்ச்களால் (குத்துகள்) மிரளவைத்த அங்குஷ், 4-0 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்றுத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதேபோல, மகளிர் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், 3-2 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேவின் சென்னை வீழ்த்தி தங்கம் வென்றார்.

வில்வித்தையில் இந்தியாவிற்கு 4ஆவது தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளி யன்று நடைபெற்ற மகளிர் ரிகர்வ் வில்வித்தை பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின. இரு அணிகளும்துல்லிய கணிப்பை வெளிப்படுத்தி யதால், இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. முதல்இரண்டு சுற்றில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தன. ஆனால் 3ஆவது சுற்றில் தென் கொரிய அணி சொதப்பியது. இது இந்திய அணிக்குச் சாதகத்தை ஏற்படுத்த, 5-3 என்ற புள்ளிக் கணக்கில் அங்கிதா, அனில்,கீர்த்தி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. இந்தப்பிரிவில் தென் கொரியா அணி வெள்ளிப்பதக்கமும், சீன அணி வெண்கலப்பதக்கமும் வென்றன. வில்வித்தையில்இந்தியாவிற்கு இது 4ஆவது தங்கம் ஆகும்.

பதக்கப் பட்டியல் மாலை 6:30 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 162 81 73 316

2. ஜப்பான் 71 83 85 239

3. தென்கொரியா 33 39 62 134

4. உஸ்பெகிஸ்தான் 20 23 22 65

5. இந்தியா 16 25 35 76

6. ஈரான் 15 17 13 45