தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

29 Sept 2026, 9:35 pm
ஆசிய  விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம்

‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

கிரண், பூவம்மா, ராம்ராஜ் வித்யா, பிராச்சி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி பந்தய தூரத்தை 3:29.69 நிமிடங்களில் கடந்து, முதலிடத்துடன் தங்கப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் அணி (3:30.21) வெள்ளிப் பதக்கமும், சீன அணி (3:31.02) வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

மகளிர் உயரம் தாண்டுதலில் பூஜாவிற்கு வெண்கலம்

மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா வெண்கலம் வென்றுள்ளார். பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் சைபுல்லேவா (1.90 மீ) தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் கிறிஸ்டினா (1.84 மீ) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பூஜாவின் வெண்கலம் இந்தியாவிற்கு 50ஆவது பதக்கம் ஆகும்.

கலப்பு 4x100 மீட்டர்தொடர் ஓட்டத்தில் வெண்கலம்

கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. குரிந்தர்விர் சிங், அனிமேஷ் குஜூர், ஹரிதா பத்ரா மற்றும் ஸ்னேகா எஸ்.எஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்த இந்த கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில், பந்தய தூரத்தை 41.06 விநாடிகளில் கடந்து, இந்திய அணி 3ஆவது இடத்துடன் வெண்கலம் வென்றது. பந்தய தூரத்தை 40.78 விநாடிகளில் கடந்த சீன அணி தங்கப் பதக்கத்தையும், தாய்லாந்து அணி (40.87 விநாடிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.

பதக்கப் பட்டியல் மாலை 6.30 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 143 62 49 254

2. ஜப்பான் 45 71 67 183

3. தென்கொரியா 24 27 44 95

4. உஸ்பெகிஸ்தான் 14 17 13 44

5. தாய்லாந்து 12 9 12 33

10. இந்தியா 6 21 25 52

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.