ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
26 Sept 2026, 9:55 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கபடியில் இந்தியாவிற்கு “இரட்டைத் தங்கம்”

மினி ஒலிம்பிக் என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவதுசீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் தொடங்கியது. அதைத் ொடர்ந்து பதக்கப் போட்டிகள் செப்.20 அன்று தொடங்கின. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கபடி பிரிவுக்கான இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

ஆடவர் பிரிவு

ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில்இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஈரான் அணி 18-17 என்ற புள்ளிக் கணக்கில் முன்னி

லை பெற்றது. எனினும், இரண்டாம் பாதியில் அதிரடி பாணி ஆட்டத்தைக் கையிலெடுத்த இந்திய அணி ஆல்ரவுண்ட் முறையில் ஈரானை விடப்புள்ளிகளை வேகமாகச் சேர்த்தது. இந்திய வீரர்களின் இந்த திடீர் மற்றும்வலுவான தாக்குதல் ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஈரான் கடுமையாக திணறியது.இறுதியில் இந்திய அணி 40-34 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு இது 9ஆவதுதங்கப் பதக்கமாகும். அதேபோல, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஈரான் அணி வெள்ளிப் பதக்கம்வென்றது. தாய்லாந்து மற்றும் சீனதைபே அணிகள் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றின.

மகளிர் பிரிவு

மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. ஆடவர் போட்டியை விடஇந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெற்றது. முதல் பாதியில் இந்தியஅணி 22-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் இந்தியமகளிர் அணி எளிதாக வெற்றி பெறும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பாதியில் ஈரான் அணி திடீரெனத் தாக்குதலில் இறங்கியது. ரெய்டு, தடுப்பாட்டம் என இரண்டு பிரிவுகளிலும் ஈரான் அணி சீரான இடைவெளியில் புள்ளிகளைக் குவித்தது.

எனினும், இறுதிக்கட்ட ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணி ஆட்டநேர முடிவில் 37-34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இது 4ஆவது தங்கப்பதக்கமாகும். ஈரான் அணி வெள்ளிப்பதக்கத்தையும், நேபாளம் மற்றும் சீன தைபே அணிகள் வெண்கலப் பதக்கங்களையும் வென்றன.

குண்டு எறிதலில் இந்தியாவிற்கு வெள்ளி

ஆடவர் குண்டு எறிதல் இறுதிச்சுற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், தஜிந்தர்பால் சிங் தனது ஐந்தாவது வாய்ப்பில் 20.64 மீட்டருக்கு குண்டு எறிந்து வெள்ளி வென்றார். ஈரானின் முகம்மத்ரேசா 20.81 மீட்டருக்கு எறிந்து தங்கமும், சவூதி அரேபியாவின் முகமது 20.48 மீட்டரு

க்கு எறிந்து வெண்கலமும் வென்றனர். பஞ்சாப்பைச் சேர்ந்த தஜிந்தர்பால் சிங் முன்னதாக 2018, 2022

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். தற்போது, வெள்ளி வென்று ஹாட்ரிக் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பதக்கப் பட்டியல் மாலை 6:00 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 106 40 27 173

2. ஜப்பான் 31 48 47 126

3. தென்கொரியா 16 21 36 73

4. உஸ்பெகிஸ்தான் 8 17 9 34

5. கஜகஸ்தான் 8 8 19 35

10. இந்தியா 4 12 14 30