தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

25 Sept 2026, 9:39 pm
ஆசிய  விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

மினி ஒலிம்பிக் என அழைக்கப் படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் கடந்த வாரம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பதக்கப் போட்டிகள் ஞாயிறன்று தொடங்கின.இந்நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6ஆவது நாளான வெள்ளியன்று துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத், சுருச்சி சிங் இணை அபாரமாக செயல்பட்டு இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 484.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து,நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு 2ஆவது தங்கப்பத க்கத்தைப் பெற்றுத் தந்தது.இந்த பிரிவில் 478.0 புள்ளிகளுடன் தென் கொரிய அணி வெள்ளிப்பதக்கமும், 415.8 புள்ளிகளுடன் ஈரான் அணிவெண்கலப்பதக்கமும் வென்றன.

டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு வெண்கலம்

டேபிள் டென்னிஸ் பிரிவு கலப்பு இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன அணிகள் மோதின. வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் மனுஷ் - தியா ஜோடி, சீனாவின் வாங் - சன் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. எனினும் சீன அணி 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

குண்டு எறிதலில் மன்பிரீத் கௌருக்கு வெண்கலம்

மகளிர் குண்டு எறிதல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மன்பிரீத் கௌர் பங்கேற்றார். மன்பிரீத் தொடக்கத்தில் மந்தமாக விளையாடினார். அதாவது முதல் மூன்று வாய்ப்புகளில் 16.32, 16.41, 16.80 மீட்டருக்கு மட்டுமே குண்டு எறிந்தார். ஆனால் நான்காவது வாய்ப்பில் திடீரென 17.17 மீட்டருக்கு குண்டு எறிந்தார். ஐந்தாம் வாய்ப்பில் 16.75 மீட்டரும், கடைசி வாய்ப்பில் பவுல் செய்து சொதப்பினார். எனினும் நான்காவது வாய்ப்பில் எறிந்த 17.17 மீ தூரம் மன்பிரீத் கௌருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தது. தங்கம் மற்றும் வெள்ளி முறையே சீன வீராங்கனைகள் வென்று அசத்தினர். மற்றொரு இந்திய வீராங்கனையான கிருஷ்ணா ஜெய்ஷங்கர் 16.57 மீட்டருக்கு குண்டு எறிந்து ஐந்தாம் இடத்துடன் பதக்க வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்வீர் சிங் வெள்ளி வென்றார்

ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்வீர், 28 நிமிடங்கள் 29.38 வினாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

உத்தரப் பிரதேசத்தின் அட்ரௌலியைச் சேர்ந்த 28 வயதான குல்வீர் சிங், கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இரண்டாவது முறையாகப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். பஹ்ரைனைச் சேர்ந்த பலே பிர்ஹானு 28 நிமிடங்கள் 27.51 வினாடிகளில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தையும், மற்றொரு பஹ்ரைன் வீரர் கிப்ட்டூ ஆல்பர்ட் 28 நிமிடங்கள் 34.38 வினாடிகளில் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலத்தையும் வென்றனர்.

4 பதக்கங்கள் உறுதி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் கபடி அணி தாய்லாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. ஏற்கெனவே, தோல்வியே காணாமல் இந்திய மகளிர் கபடி அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளான 18 வயதான அனாஹத் சிங்கும், 30 வயதான தன்வி கண்ணாவும் மோதினர். இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என்ற கேம்களில் ஆதிக்கம் செலுத்தி வென்றார். அதேபோல ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், ஜப்பானின் ரியூனோசுகே சுகுயேவுடன் மோதினார். இந்தப் போட்டியில் அபய் சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என்ற கேம்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பதக்கப் பட்டியல் மாலை 6:00 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 97 36 24 157

2. ஜப்பான் 27 42 44 113

3. தென்கொரியா 13 17 34 64

4. கஜகஸ்தான் 8 8 13 29

5. உஸ்பெகிஸ்தான் 6 15 9 30

12. இந்தியா 2 9 11 22

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.