ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
4 Oct 2026, 8:46 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தியாவிற்கு 4ஆவது இடம் 3 பதக்கம் வென்ற நீரு தண்டா தேசியக் கொடி ஏந்தினார்

‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 20ஆவது சீசன்ஜப்பான் நாட்டின் ஐச்சி-நகோயாவில் செப். 19 அன்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பரபரப்பாக நடைபெற்ற இந்தத் தொடரில், 46 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டவீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். கனமழைக்கு இடையே போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. அதே சமயம் பதக்கம் வெல்வதில்தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனா 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம்341 பதக்கங்களை வென்று எந்த நாடும் அருகே நெருங்க முடியாத அளவிற்கு முதலிடம் பிடித்தது. போட்டியைநடத்தும் ஜப்பான் 83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலம் என 269 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தையும், தென்கொரியா 39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தன. கடைசி நேரத்தில் அதிரடியாகப் பதக்கம் குவித்த இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை வென்று 4ஆவது இடம்பிடித்தது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியவீராங்கனை நீரு தண்டா (துப்பாக்சிச் சுடுதல் - 2 தங்கம், ஒரு வெள்ளி) தேசியக் கொடி ஏந்தி இந்தியஅணியை வழிநடத்தினார். கலைநிகழ்ச்சி மற்றும் வீரர் - வீராங்கனைகளின் அணிவகுப்புடன் 20ஆவது சீசன்ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவுபெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 21ஆவது சீசன் 2030ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெறுகிறது. இதற்கான கொடி அந்நாட்டிடம் முறைப்படி வழங்கப்பட்டது.

இதுதான் இந்தியாவின் அதிரடி 60 மணிநேரத்தில் 9 இடம் முன்னேறி அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டாப் 5 தரவரிசையுடன் பதக்க வேட்டை நிகழ்த்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பிரிவு ஆட்டம் தொடங்கிய நாள் முதல் அக். 1ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு வார காலமாக இந்தியா பதக்கப் பட்டியலில் 8 முதல் 13ஆவது இடத்தில்தான் பின்தங்கியிருந்தது. அதனால் “இந்தியா அவ்வளவுதான்; ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகள் விளையாட்டு உலகில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிட்டன” என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் கடைசி 3 நாட்களில் எல்லாம் தலைகீழாக மாறியது. அதாவது, கடைசி 60 மணிநேரத்தில் (தோராயமாக) அதிரடியாகப் பதக்க வேட்டையில் இறங்கிய இந்தியா, ஜெட் வேகத்தில் 9 இடங்கள் முன்னேறிப் பதக்கத் தரவரிசையில் 4ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் இந்த அதிரடி செயல்பாடு உலகளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அதேசமயம், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதுங்கிப் பாய்ந்து, ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் மிரட்டியுள்ளது” என விளையாட்டு வல்லுநர்கள் இந்தியாவை போற்றிப் புகழ்ந்துள்ளனர். எனினும், கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களை வென்ற இந்தியா, நடப்பு சீசனில் 85 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப் பட்டியல்

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 169 89 83 341

2. ஜப்பான் 83 95 91 269

3. தென்கொரியா 39 43 68 159

4. இந்தியா 21 27 37 85

5. உஸ்பெகிஸ்தான் 21 25 24 70

6. ஈரான் 19 18 15 52

7. தாய்லாந்து 18 13 21 52

8. கஜகஸ்தான் 12 24 48 84

9. ஹாங்ஹாங்(சீனா) 11 39 24 54

10. பஹ்ரைன் 11 05 06 22