ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
3 Oct 2026, 8:53 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது!

மினி ஒலிம்பிக் என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின்ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் கிரிக்கெட் போட்டி பிரிவின்இறுதி ஆட்டம் (டி-20 வடிவம்) சனியன்று நடைபெற்றது.

கரோகி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மா (61 ரன்கள்), திலக் வர்மா (51 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 120 பந்துகளுக்கு 212ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி, வெற்றிக்காகப் போராடினாலும் போதுமான அளவில் பந்துகளை வீணடித்ததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்துதோல்வியடைந்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி,ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 2ஆவது முறையாகத் தங்கப்பதக்கம் (இந்திய மகளிர் அணியும் தொடர்ந்து 2ஆவது முறையாக) வென்றது. 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்தது.

ஆடவர், மகளிர் அணியில் தமிழர்கள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளன. இந்த இரண்டுஅணிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஆடவர் அணியில் சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், மகளிர் பிரிவில் மதுரை வீராங்கனை கமலினியும் இந்திய அணிக்காக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வில்வித்தையில் இந்தியாவிற்கு 5ஆவது தங்கம்

மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் ரிகர்வ் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கும்கும் மோகத் அனில், தென்கொரியாவின் ஓஹ் எஜினை எதிர்கொண்டார். தொடக்கத்தில் எஜின்ஆதிக்கம் செலுத்தினாலும், 3ஆவது கேம் முதல் அசத்தலானஆட்டத்தை வெளிப்படுத்தியகும்கும் 6-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

வில்வித்தையில் இந்தியாவிற்கு இது 5ஆவது தங்கப்பதக்கம் ஆகும். அதே சமயம் நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கும்குமிற்கு இது3ஆவது பதக்கம் ஆகும். இதற்குமுன் மகளிர் ரிகர்வ் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், கலப்புஇரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

கோல்ப் : தங்கம் வென்றார் பிரணவி

மகளிர் கோல்ப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணவி பங்கேற்றார். தொடக்கம் முதலே புள்ளிகள் குவிப்பதில் (மைனஸ் பாயிண்ட்) ஆதிக்கம் செலுத்திய பிரணவி, 265 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். 266 புள்ளிகளுடன் சீனா மற்றும் சிங்கப்பூர் வீரங்கனைகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.(மைனஸ் பாயிண்ட் அடிப்படையில் சீனா, சிங்கப்பூருக்கு பதக்கம்)வெள்ளிஅதே போல கோல்ப் மகளிர் அணி பிரிவு இறுதிச் சுற்றில் அதீதி, பிரணவி, திக்சா ஆகியோர் அடங்கிய இந்தியஅணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் நிதானமாக புள்ளிகளை குவித்தஇந்திய அணி 546 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது. சீன அணி (536 புள்ளிகள்)தங்கமும், சீன தைபே அணி (550 புள்ளிகள்) வெண்கலமும் வென்றன. (கோல்ப் விளையாட்டில் குறைவானபுள்ளிகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்)

மாலை 6:30 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 169 89 83 341

2. ஜப்பான் 83 95 91 269

3. தென்கொரியா 39 43 68 150

4. இந்தியா 21 27 37 85

5. உஸ்பெகிஸ்தான் 21 25 24 70

6. ஈரான் 19 18 15 52