தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

24 Sept 2026, 8:31 pm
ஆசிய  விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

100 பதக்கங்களைக் கடந்த சீனா நீச்சல், வுஷு, துப்பாக்கிச் சுடுதலில் ஆதிக்கம்

ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் 20ஆவது சீசன் ஆசியவிளையாட்டுப் போட்டிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பரபரப்பாக நகர்ந்து வருகின்றன. இளம் வீரர் - வீராங்கனைகள் அதிகளவில் பங்கேற்றுள்ளதால் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவும் அனல்பறக்கும் அதிரடியுடன் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.

இந்நிலையில், 1982ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிய விளையாட்டுப் போட்டி

களின் பதக்கப் பட்டியலில் முதலிட அந்தஸ்துடன் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, நடப்பு சீசனிலும் தீவிர

பதக்க வேட்டை நிகழ்த்தி மிக விரைவாக 100 பதக்கங்களை கடந்துள்ளது. வியாழனன்று மாலை நிலவரப்படி சீனா 77 தங்கம், 27 வெள்ளி, 18வெண்கலம் என மொத்தம் 122 பதக்கங்களை வென்றிருந்தது. ஜப்பான், தென்கொரியா, கஜ கஸ்தான், ஈரான்,தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஹாங்காங்-சீனா, மலேசியா, வடகொரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இருந்தன.

சீனா நீச்சல், வுஷு, துப்பாக்கிச் சுடுதல் பிரிவுகளில் அதிக பதக்கங்களை வென்று பிரம்மாண்ட ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நீச்சலில்மட்டும் அதிகபட்சமாக 21 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம்37 பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல வுஷு என அழைக்கப் படும் தற்காப்புக் கலைப் பிரிவில் 12 தங்கப்பதக்கங்களையும், துப்பாக்கிசுடுதலில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களையும் வென்றுள்ளது. படகுப் போட்டியில் 8 தங்கம், 1 வெள்ளி என 9 பதக்கங்களை வென்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியல் மாலை 6:00 மணி வரை

இடம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

1. சீனா 77 27 18 122

2. ஜப்பான் 20 31 37 88

3. தென்கொரியா 10 12 28 50

4. கஜகஸ்தான் 8 8 9 25

5. ஈரான் 6 10 3 19

14. இந்தியா 1 6 8 15

வுஷூ பிரிவில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை

மகளிர் 60 கிலோ வுஷூ பிரிவின் (தற்காப்புக் கலை) இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜாங், இந்திய வீராங்கனை நௌரெம் ரோஷிபினா தேவி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனை ஜங், 2-0என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய நௌரெம் ரோஷிபினாதேவி 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நௌரெம் ரோஷிபினா தேவி மணிப்பூர் மாநிலத்தைச்சேர்ந்த வீராங்கனை ஆவார். இதன் மூலம் நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வன்முறையால்பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்துநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

டுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலம்

ஆடவர் துடுப்புப் படகுப் போட்டியின் இரட்டையர் பிரிவில் சத்னம் சிங், சல்மான் கான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தயத் தூரத்தை 6:13.25 நிமிடங்களில் கடந்து, 3ஆவது இடத்துடன் வெண்கலம் வென்றது. சீன அணி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தான் அணி (6:10.49) இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.

துடுப்புப் படகுப் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 4ஆவது இடம் பிடித்து, நூலிழையில்வெண்கலப் பதக்கத்தை இழந்தார். அதேபோல துடுப்புப் படகுப் போட்டியின் பிற பிரிவுகளிலும் இந்தியாசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பதக்கம் வெல்லும் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.