தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைப்பாளி மக்களின் குரல்வளையாக செயல்படுவேன் சிபிஎம் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ டி.அசோக்குமார் உறுதி

20 May 2026, 12:23 am
உழைப்பாளி மக்களின் குரல்வளையாக செயல்படுவேன்  சிபிஎம் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ டி.அசோக்குமார் உறுதி
<p><strong>உழைப்பாளி மக்களின் குரல்வளையாக செயல்படுவேன் சிபிஎம் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ டி.அசோக்குமார் உறுதி</strong></p><p>புதுச்சேரி, மே 19- உழைப்பாளி மக்களின் குரல்வளை யாக செயல்படுவேன் என்று சிபிஎம் ஆதர வோடு தேர்வு செய்யப்பட்ட மாஹே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறி ஞர் டி. அசோக்குமார், எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, மாஹே சட்டமன்ற உறுப்பி னர் வழக்கறிஞர் டி.அசோக் குமார் செவ்வாய்க்கிழமை சிபிஎம் புதுச்சேரி மாநிலக் குழுவின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், அசோக்குமாரை வரவேற்று கதர் ஆடை அணிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், திருப்பி அடித்த வரலாறு என்ற புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், சரவணன், ஆனந்த், ஜோதி பசு உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் தலைவர்களிடம் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், புதுச்சேரி சட்டப்பேரவையில் மா ஹே பகுதி மக்களின் பிரச்சனைகள் மட்டும் இல்லாமல், புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்க ளின் பிரச்சனைகளையும் எடுத்துச் சென்று, குரல்வலையாக செயல்படுவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் உறுதிபட தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (மே 20) காலை நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.