முந்தய பக்கம்

நிதி ஆயோக் துணைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ நியமனம்!

25 Apr 2026, 4:44 pm
நிதி ஆயோக் துணைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ நியமனம்!

பொருளாதார நிபுணரும், மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ-வுமான அசோக் குமார் லஹிரியை நிதி ஆயோக் துணைத் தலைவராக நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் மிக முக்கியமான கொள்கை உருவாக்க அமைப்பாகும். வரும் மே 1-ஆம் தேதியுடன் நிதி ஆயோக்கின் தற்போதைய துணைத் தலைவர் சுமன் பெர்ரியின் பதவி காலம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், புதிய துணைத் தலைவராக அசோக் குமார் லாகிரி நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவருடன், ராஜீவ் கௌபா, பேராசிரியர் கே.வி.ராஜு, பேராசிரியர் கோபர்தன் தாஸ், பேராசிரியர் அபய் கரந்திகர், டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நிதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பலூர்காட் தொகுயின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான அசோக் குமார் லஹிரி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram