தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

5 Jan 2026, 6:21 pm
விளையாட்டு

ஆஷஸ் - சிட்னி டெஸ்ட் 7 பந்துவீச்சாளர்களுடன் ஆஸி., போராட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிறன்று ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து  முதலில் களமிறங்கியது. தொடக்கத் தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஜோ  ரூட் (72 ரன்கள்), ஹாரி ப்ரூக் (78 ரன்கள்) ஆகியோரின் நிதான ஆட்டத் தால் இங்கிலாந்து அணி முதல் நாளில் 45 ஓவர்களில் (போதிய வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தம்) 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து திங்களன்று நடை பெற்ற 2ஆவது நாள் ஆட்டத்தில் ஹாரி ப்ரூக் 84 ரன்கள் எடுத்து ஆட்டமி ழந்தார். ஜோ ரூட் சதமடிக்க, இது இங்கி லாந்து அணிக்கு வலுவான அடித்த ளத்தை அமைத்துக் கொடுத்தது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் (46 ரன்கள்) சிறிது களத்தில் ஆட்டம் காட்டி பெவிலியன் (ஆட்டமிழந்து) சென்றார். ஜோ ரூட் 160 ரன்கள் (242  பந்துகள், 15 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சில நிமி டங்களில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்தி ரேலிய தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக் கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டு களையும் வீழ்த்தினர் (அதிகபட்ச விக்கெட்டுகள் மட்டும்). இங்கிலாந்து அணி பெரியளவில் ரன் குவிக்காவிட்டாலும், அந்த அணி யை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்தி ரேலியா அணி 7 பந்துவீச்சாளர்களுடன் போராடியது. ஹெட் அதிரடி அடுத்து களமிறங்கிய ஆஸ்தி ரேலிய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ஜேக் வெதரால்ட் (21 ரன்கள்), மார்னஸ் லபுசாக்னே (48 ரன்கள்) ஆகியோ ரின் சீரான இடைவெளியில் ஆட்ட மிழக்க, மறுபக்கம் வழக்கம் போல டிரா விஸ் ஹெட் அதிரடியாக விளையாடி னார்.  2ஆம் நாள் ஆட்டநேர முடி வில் ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. டிரா விஸ் ஹெட் (91 ரன்கள்), நேசர் (1 ரன்) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப் பற்றினார். இங்கிலாந்து அணியை விட  ஆஸ்திரேலியா 218 ரன்கள் பின்தங்கி  உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக மாணவியின் கல்லூரி படிப்புக்கு உதவிய ரிஷப் பண்ட்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், பிலாகி தாலுகாவைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் பியுசி (12ஆம் வகுப்பு) தேர்வில் 83% மதிப்பெண்கள் பெற்றார். இவரது தந்தை ஒரு சிறிய தேநீர்  கடை நடத்தி வருகிறார். குடும்ப வறுமை காரணமாக, ஜோதி  விரும்பிய பிசிஏ (Bachelor of Computer Applications) படிப்பிற்கான முதலாம் ஆண்டு கட்டணமான ரூ.40,000 தொகையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாணவியின் நிலை குறித்து அறிந்த உள்ளூர் ஒப்பந்த தாரர் அனில் ஹுனாஷிகட்டி, பெங்களூருவில் உள்ள தனது நண்பர்கள் மூலம் இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். விஷயத்தை அறிந்த ரிஷப் பண்ட் எவ்வித விளம்பரமும் இன்றி, கடந்த ஜூலை 17 அன்று மாணவி யின் கல்லூரி வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.40,000 தொகையை அனுப்பி வைத்தார். மேலும், அந்த மாணவி யின் முழு கல்லூரிப் படிப்புச் செலவையும் ஏற்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.  இந்த நிகழ்வு 2025 ஜூலை மாதம் நடந்துள்ள நிலை யில், 6 மாதங்களுக்குப் பிறகு செய்தியாக வெளியே கசிந்துள்ளது. தற்போது மாணவியின் கல்லூரி படிப்புக்கு உதவிய ரிஷப் பண்டிற்கு சமூகவலைத்தளங்களில்  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.