ஆஷா ஊழியர் சங்க உதகை மாவட்டப் பேரவை
16 Jul 2026, 10:10 pm
<p><strong>ஆஷா ஊழியர் சங்க உதகை மாவட்டப் பேரவை</strong></p><p>உதகை, ஜூலை 16- கூடலூரில் ஆஷா ஊழியர் சங்கத்தின் நீல கிரி மாவட்டப் பேரவை நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆஷா ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) நீல கிரி மாவட்டப்பேரவை கூடலூரில் வியாழனன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.ராஜன் தலைமை ஏற்றார். சிஐ டியு மாநில துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கேசனிரோஜா வேலை அறிக்கையையும், பொருளாளர் இந்துமதி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட நிர்வாகி குஞ்சு முகமது, ஆஷா சங்க மாநிலச் செயலா ளர் சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. வினோத் நிறைவுரையாற்றினார். இதில், ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, மாத ஊதியம் ரூ.26,000 ஆக நிர்ணயிக்க வேண்டும்; 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு சுகாதார செவிலி யர் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டத் தலைவராக கலைச் செல்வி, செயலாளராக இந்துமதி, பொருளா ளராக கேசினி ரோஜா, துணைத் தலைவர் களாக கிருஷ்ணவேணி, அம்பிகா, துணைச் செயலாளர்களாக நவசந்தி, சுமதி உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய மாவட்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
