புதுவையில் ஆஷா ஊழியர்கள் போராட்டம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>புதுவையில் ஆஷா ஊழியர்கள் போராட்டம்</strong></p>
<p>புதுச்சேரி, நவ.20- ஆஷா ஊழியர்களுக்கு அறிவித்தபடி ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் ஆஷா ஊழியர்களுக்கு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடி மாத ஊதியத்தில் இருந்து ரூ. 8000 உயர்த்தி வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் அனந்தநாயகி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கெளரவ தலைவர் பிரேமதாசன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் முனுசாமி,துணை பொதுச்செயலாளர் மணிவாணன், சுகாதார சம்மேளனத்தின் துணை தலைவர் கிரி ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் வேல்மதி உள்ளிட்ட திரளான ஆஷா பெண் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.</p>
