கராத்தே போட்டி: ஆஷ் லீ ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை!
25 May 2026, 11:33 pm
<p><strong>கராத்தே போட்டி: ஆஷ் லீ ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை!</strong></p><p>திருவள்ளூர், மே 24- திருவள்ளூர் மாவட்ட ஷிட்டோ-ஷுகோ கராத்தே சங்கம் சார்பாக, மாவட்ட அளவி லான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் தாமரைப்பாக்கத்தில் ஞாயிறன்று (மே 24) நடைபெற்றது. இந்தத் தொடரில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஆஷ் லீ ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் காட்டா மற்றும் குமித்தே ஆகிய பிரிவுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி கோப்பை பெற்ற மாணவர்கள் ஆசியா மைமூன் காட்டா பிரிவில் முதலிடம், ருசானா பானு : காட்டா பிரிவில் முதலிடம், அன்வர் பாஷா: காட்டா பிரிவில் முதலிடம்,ரக்சன் சாய்: காட்டா பிரிவில் இரண்டாம் இடம், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு கோப்பையும் , சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆஷ் லீ ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் முகமது அசேன், விசிக திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், மேற்கு மாவட்ட தொகுதி செயலாளர் அன்பு, பூண்டி ஒன்றிய செயலாளர் ஏறையூர் சுதா, இந்தியாவின் தலைமை பயிற்சி யாளர் ஷிஹான் மோகனசுந்தரம் தலை மையில், சிஎம்ஏ ஸ்போர்ட் அகாடமி ஒருங்கிணைப்பாளர்கள் கபில், ஹரி மற்றும் கராத்தே வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வீரர்களை ஊக்கப்படுத்தினர்.</p>
