முந்தய பக்கம்

ஆசனூர் குளத்தின் ஒரு பகுதி மண் கொட்டி மூடல் பொதுமக்கள் கடும் கண்டனம்

30 May 2026, 12:21 am
ஆசனூர் குளத்தின் ஒரு பகுதி மண் கொட்டி மூடல் பொதுமக்கள் கடும் கண்டனம்

ஆசனூர் குளத்தின் ஒரு பகுதி மண் கொட்டி மூடல் பொதுமக்கள் கடும் கண்டனம்

உளுந்தூர்பேட்டை, மே 29- ஆசனூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின் போது, முக்கிய நீராதாரமாக விளங்கும் பிரதான குளத்தின் ஒரு பகுதியை மண் கொட்டி மூடியுள்ளதற்குப் பொதுமக்களும் விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயம், கால்நடைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக விளங்கும் இக்குளத்தின் ஒரு பகுதியை, சாலை விரிவாக்கப் பணிக்காகத் தோண்டப்பட்ட கழிவு மண்ணைக் கொட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மூடியுள்ளனர். மேலும், தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்துவதற்காகவும் இக்குளத்தில் 10 டிப்பர் மண் கொட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுத் துறையே நீர்நிலையை மூடும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும், இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குளத்தில் கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, பழைய நிலையை மீட்டெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram