முந்தய பக்கம்

அசையும் தண்ணீர்த் தேரு! - சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

21 Nov 2026, 9:29 pm
அசையும் தண்ணீர்த் தேரு! - சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

அசையும் தண்ணீர்த் தேரு! - சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

அங்கே பாரு ஆறு-அது

அசையும் தண்ணீர்த் தேரு .

எங்கும் பாயும் நீரு!- அதில்

இருக்கு நன்மை நூறு!

மேடு பள்ளம் பாயும்-கரை

மேலே மரமும் சாயும்.

காடு கழனி தோயும் - பின்

கடலைத் தொட்டே ஓயும்.

ஏரி குளத்தை முட்டும்!- அதன்

எழிலோ தேனைச் சொட்டும்!

வாரி வாரிக் கொட்டும் - அதன்

வரவால் வளமும் கிட்டும்.

ஆறில் லாத நாடு- உயிர்

அற்ற எலும்புக் கூடு.

ஆறு தருமே பீடு - அது

அற்றால் வருமே கேடு.

வளைந்து நெளிந்தே ஒடும்- அதன்

வாழ்க்கை கொடையைப் பாடும் .

அலைகள் எழுந்தே ஆடும் - வெள்ளம்

அற்ற போதும் ஊறும்.

மணலே ஆற்றின் தங்கம்- அந்த

மணலே கொள்ளை எங்கும்.

மணலால் நிலநீர் தங்கும்- அதனால்

மணலைக் காக்கப் பொங்கும்.

Share
FacebookXWhatsAppTelegram