தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 Apr 2026, 5:30 am

தலைவன் எவ்வழியோ... தொண்டனும் அவ்வழி!

மயிலாப்பூர் தி.மு.க. வேட்பாளர் லெட்சுமணராமன், தனது குழந்தையைக் கண்ணில் காட்ட மறுப்பதோடு, மீறிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது மனைவி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அரசியல் களத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கிளம்பியுள்ள தி.மு.க-வினர் மீது குடும்ப வன்முறைப் புகார் எழுந்துள்ளது. தலைவனின் வழியிலேயே தொண்டர்களும் பயணிக்கிறார்களோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருப்பரங்குன்றம் சங்கிகளுக்கு விழுந்த சட்ட அடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்த சங்கி ஆதரவாளருக்கு உயர்நீதிமன்றக் கிளை அபராதம் விதித்துள்ளது. “அரசியல் லாபத்திற்காக இதையே வேலையாக வைத்துள்ளீர்களா?” என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் நேரத்தில் மதக் கலவரத்தை மூட்டத் திட்டமிட்ட சங்கிகளின் சூழ்ச்சிக்குச் சட்டரீதியான பின்னடைவு கிடைத்துள்ளது. மதுரை மக்கள் இத்தகைய சூழ்ச்சிகளை தேர்தலிலும் முறியடிப்பார்கள்.

‘ஜனநாயகன்’ கசிந்தது; மௌனம் ஏன்?

‘ஜனநாயகன்’ படத்தின் முக்கிய 5 நிமிடக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. படம் தணிக்கை வாரியத்தின் வசமிருக்கும்போது இக்காட்சிகள் கசிந்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜக அரசுக்கு எதிராகத் தன் படம் பேசுகிறது எனச் சொல்லும் ‘ஜனநாயகன்’ நடிகர், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக வாய் திறப்பாரா என்பது கேள்விக்குறியே.

தடம் மாறும் த.வெ.க ரசிகர்கள்!

“இளைஞர்கள் ஜாக்கிர தை யாக இருக்க வேண்டும், விபத்து ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்குத்தான் இழப்பு”

என ரஜினிகாந்த் கூறிய அறி வுரைக்கு, விஜய் ரசிகர்கள் கடும் வசவுகளாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ரஜினியை ‘காலாவதி

யானவர்’ என இழிவுபடுத்தும் ரசிகர்களை நெறிப்படுத்த த.வெ.க தலைமை முன்வரவில்லை. ரஜினியின் பேட்டிக்குப் பின், விஜய்யைப் பின்தொடர்ந்து சென்றவர்களில் 5 விபத்துகள் ஏற்பட்டு 16 பேர் காயமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விஜய்‘தெய்வீக’ சக்தியா?

விஜய் ஏன் மக்களைச் சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு, அவர் ஒரு ‘தெய்வீக ஈர்ப்பு சக்தி கொண்ட கடவுள் போன்றவர்’ (Cult figure) என அவரது ஆதரவாளர் பெருமாள் மணி பதிலளித்துள்ளார்.

இது போன்ற வழிபாட்டு பிம்பங்களாகத் தங்களைக் கருதிக்கொண்டவர்கள், வரலாற்றில் தங்களையும் அழித்துக்கொண்டு தங்களைப் பின்பற்றுபவர்களையும் அழித்த அழிவு சக்திகளாகவே இருந்துள்ளனர். இந்த உண்மை

யை உணர்வது தமிழ் சமூகத் திற்கு நல்லது.