தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு

24 Jul 2026, 9:42 pm
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு

புதுதில்லி, ஜூலை 24- நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் காலிப் பணியிடங்கள், வரவு-செலவு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி பதிலளிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

எம்.பி. எழுப்பிய கேள்விகள் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் இதுதொடர்பாகக் கேள்விகளை எழுப்பி னார்.

தொழிற்சாலையில் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் காலி யிடங்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கான நிதிநிலை, வனப்பகுதியில் அமைந்துள்ள தால் வனவிலங்குகளால் தொழிலாளர் கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் கோரினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, கோரப்பட்ட விவரங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி இவற்றை வெளிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சனம் ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் வனவிலங்குத் தாக்குதலில் இருந்தான பாதுகாப்பு போன்ற அடிப்படை மனித உரிமை சார்ந்த கேள்விகளைக்கூட “தேசிய பாதுகாப்பு” எனக் கூறி மறைப்பது ஜனநாயக விரோதமானது என்று சாடியுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த அணுகு முறையைக் கண்டித்து, இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரை மணி நேர விவாதத்திற்கு அவர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.