தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி… அருணாபுரம் பகுதியில் பழுதடைந்த தொட்டி சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் தொடங்கியது

5 Jul 2026, 1:42 am
தீக்கதிர் செய்தி எதிரொலி… அருணாபுரம் பகுதியில் பழுதடைந்த தொட்டி சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் தொடங்கியது
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி… அருணாபுரம் பகுதியில் பழுதடைந்த தொட்டி சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் தொடங்கியது</strong></p><p>விழுப்புரம், ஜூலை 4 – விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் அருணாபுரம் பட்டியலின மக்கள் குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக பழு தடைந்து கிடந்த மினி டேங்க், தீக்கதிரில் வெளியான செய்தியின் எதிரொலியாகச் சரிசெய்யப்பட்டது. இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்து ஜூன் 29 அன்று செய்தி வெளியான நிலையில், மாவட்ட ஆட்சி யரின் தலையீட்டால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வியாழக்கிழமை மாலை பழு தடைந்த மோட்டார்களைச் சரி செய்து குடிநீர் விநியோகத்தை மீட்டெடுத்தனர். ஒரு மாத கால சிக்கலுக்குத் தீர்வு காண உதவிய ‘தீக்கதிர்’ நாளிதழுக்கும், துரித மாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி களுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரி விக்கப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.