முந்தய பக்கம்

அருணாச்சலில் பலத்த மழை வெள்ளம் அசாமில் அபாய எச்சரிக்கை

24 Jun 2026, 8:52 pm
அருணாச்சலில் பலத்த மழை வெள்ளம் அசாமில் அபாய எச்சரிக்கை

அருணாச்சலில் பலத்த மழை வெள்ளம் அசாமில் அபாய எச்சரிக்கை

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகி றது. கடந்த 24 மணி நேரத்தில் 72.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இத னால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா கவும் கூறப்படுகிறது.

18 வீடுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் சிலர் காணாமல் போ யுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினரும் ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அருணாச்சலில் கனமழை காரண மாக அதை ஒட்டியுள்ள அசாம் மாநி லத்தின் எல்லை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அசாம் அரசு அதிதீவிர எச்சரிக்கை

அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் அசாம் அரசு தனது அனைத்துத் துறைகளையும் அதிதீவிர எச்சரிக்கையில் (High Alert) வைத்துள் ளது. இந்த பெருமழை அசாம் மாநிலத் தின் கீழ்மட்ட மாவட்டங்களான தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத், சோனித்பூர் ஆகிய பகுதிகளில் ஆற்று நீர்மட்டமும், நீரோட்டத்தின் வேகமும் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது.

மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் இதர அவசர கால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram