வெள்ளம், நிலச்சரிவால் அருணாச்சல் பிரதேசத்தில் கடும் பாதிப்பு!
5 hours before

அருணாச்சல் பிரதேசத்தின் இரு மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் சுபன்சிரி மற்றும் கெயி பன்யோர் மாவட்டங்களில் குறுகிய நேரத்தில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின, வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், முக்கிய உள்கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் காணாமல் போயியுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் பிற அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.