முந்தய பக்கம்

அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகம் திறப்பு

28 Feb 2026, 2:29 pm
அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகம் திறப்பு
<p><strong>அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகம் திறப்பு</strong></p> <p>பெரம்பலூர், பிப்.28- &nbsp;பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு, ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.11.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிராபகரன் முன்னிலையில் திறந்து தொடங்கி வைத்தார். &nbsp;அதனை தொடர்ந்து, வேப்பந்தட்டை வட்டம் எறையூர் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில் ரூ.43.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பில் வாலிகண்டபுரம் இஸ்லாமியர் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினையும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். மொத்தம், ரூ.12,85,80,000 மதிப்பிலான திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. &nbsp;இந்நிகழ்வுகளில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ. துவாரகநாத் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram