முந்தய பக்கம்

பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம்

18 May 2026, 10:50 pm
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள  மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம்
<p><strong>பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம்</strong></p><p>அருமனை, மே .18 - கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை- குழித்துறை நெடுஞ்சாலையில் மூன்று மதுபானக் கடைகள் செயல்படு கிறது. இதில் அருமனை சந்திப்பின் அருகில் அமைந்துள்ள மதுபான கடை யால் அருமனையில் அதிக அளவு நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்திற் கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல கட்ட போராட் டங்கள் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு பள்ளிக்கூடம் அருகில் தனியார் பார் அமைந்துள்ளது குறிப்பி டத்தக்கது. கடந்த இரு தினங்களுக்கு முன் னால் அருமனை அருகே கடையாலு மூடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு அந்தக் கடை அங்கிருந்து அகற்றப் பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை மதியம் அருமனை டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. கடையை திறக்க விடாமல் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் அருமனை பேரூராட்சி தலைவர் லெதிகா மேரி, பேரூராட்சி கவுன்சி லர்கள் அனிதாசெலின், மேரி ஜெனோ பா, விஜயகுமார் மற்றும் திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பிரமுகர்கள் பெண்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram