மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் பொதுமக்கள் போராட்டம்
29 May 2026, 11:00 pm
<p><strong>மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் பொதுமக்கள் போராட்டம்</strong></p><p>அருமனை மே 29 கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் மூடப்பட்ட பிரச்சனைக்குரிய டாஸ்மாக்கை மீண்டும் திறந்ததால் பொதுமக்கள் போராட்டத் தில் குதித்துள்ளனர். இதனால் அரு மனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் பள்ளி கல்லூ ரிகள் ஆலயங்கள் மற்றும் பேருந்து நிலை யம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி களில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவு விடப்பட்டு 717 டாஸ்மாக் கடையை அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அருமனை சந்திப்பின் அருகில் தேவாலயங்கள் மற்றும் பகுதி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் செல்கின்ற பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற பொதுமக்கள் சில தினங்களுக்கு முன் போராட்டம் நடத்தி னார்கள். அரசு அதிகாரிகள் தலையிட்டு டாஸ்மாக் கடையை அகற்ற ஏற்பாடு செய்த தால் அன்றைய போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 12 நாட்களாக இந்தக் கடையில் வியா பாரம் நடைபெறாமல் கடையும் திறக்காமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென கடையைத் திறந்து விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கடைக்கு முன்னால் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் ஊழியர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராள மான போலீஸ் குவிக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப் போராட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர் களும் பங்கேற்றுள்ளனர்.</p>
