அருமனையில் தனியார் மதுபானக் கடையை மூடுக! ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் மனு
1 Oct 2026, 9:18 pm

அருமனையில் தனியார் மதுபானக் கடையை மூடுக! ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் மனு

நாகர்கோவில்,அக்.1-கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தமிழக அரசு, பள்ளி- கல்லூரிகள் ,பொது இடங்கள் மற்றும் ஆலயங்கள் அருகில் இருக்கக்கூடிய மது

பானக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பல கடைகள் மூடப்பட்டன. தனியார் கடைகள் மற்றும் பார் மூடப்படாத நிலையில் நீடித்து வருகின்றன. இந்நிலையில் அருமனை மேல தெரு பகுதியில் தனி

யார் மதுக் கடை பார் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை அருகில் அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. எனவே தனியார் மதுக்கடையை அகற்ற அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிகாரிகள் செவி சாய்க்காததால்மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் மனு கொடுத்து, வலியுறுத்தப்பட்டது.