முந்தய பக்கம்

மதவெறியை எதிர்த்த மாவீரர்கள்!

9 May 2026, 9:50 pm
மதவெறியை எதிர்த்த மாவீரர்கள்!
<p><strong>மதவெறியை எதிர்த்த மாவீரர்கள்!</strong> </p><p>கன்னியாகுமரி மாவட்டம் விள வங்கோடு வட்டத்தில் உள்ளது அரு மனை பேரூராட்சி. ‘ஊமையாய் வாழாதே.. மோதி அழி அல்லது தியாகம் செய்’ என்று முழங்கிய கம்யூனிஸ்ட் இயக்க மறவர்கள் தோழர்கள் பாபு மற்றும் செல்லை யன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து தனது மதவெறிக் கொடுக்கு களை விரித்தது ஆர்எஸ்எஸ் கூட்டம். அத்தகைய மதவெறிக்கெதிரான இயக் கத்தைக் கட்டி வளர்த்தது கம்யூனிஸ்ட் இயக்கம். இவ்வியக்கத்தில் முன்னணியில் நின்றனர் மார்க்சிஸ்டுகளான அருமனை தோழர்கள் பாபு மற்றும் செல்லையன். சங்பரிவாரத்தின் வளர்ச்சிக்குத் தடை யாக இருந்த காரணத்தால் 1984 மே 10 ஆம் நாள் அந்த கூட்டத்தின் கொடுவா ளுக்குப் பலியானார் தோழர் பாபு. உயிர்த்துடிப்பு அடங்கும் முன்பு பாபுவைக் காக்க கையில் தண்ணீர்க் குவளையோடு ஓடிவந்த தோழர் செல்லையனும் அதே இடத்தில் சிதைக்கப்பட்டு பலியானார். அருமனை தியாகிகளின் தியாகத் தீப வெளிச்சத்தில் மக்கள் ஒற்றுமைக்கான மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கம் முன் னேறிச் செல்லும். பெரணமல்லூர் சேகரன் </p>
Share
FacebookXWhatsAppTelegram