முந்தய பக்கம்

அருமனை அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

15 Jul 2026, 11:41 pm
அருமனை அரசு பள்ளியில்  கல்வி வளர்ச்சி நாள் விழா
<p><strong>அருமனை அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா</strong></p><p>அருமனை, ஜூலை. 15- குமரி மாவட்டம், அருமனை அருகே நெடியசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது‌. பள்ளித் தலைமையாசிரியர் ஜெய ஶ்ரீ தலைமையுரையாற்றினார். உதவித் தலைமையாசிரியர் ஷைலா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் சோமன் நாயர் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு நடைபெற்றது‌. ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல், வினாடி-வினா ஆகிய போட்டிகளில் வெற்றிபெற மாணவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ஷீலா,சுஜி,அக்ஷயா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முதுகலை தமிழாசிரியர் சுஜிஷ் நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ​​​​​​​</p>
Share
FacebookXWhatsAppTelegram