முந்தய பக்கம்

தோழர் செ.அருமைநாதன்

28 May 2026, 11:38 pm
தோழர்  செ.அருமைநாதன்
<p><strong>தோழர் செ.அருமைநாதன்</strong></p><p>அரசு ஊழியர். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தை உருவாக்கி வழி நடத்தியவர். அரசு ஊழியர்களின் உரிமைக்காக வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்த தலைவர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் இடைவிடாது சமூக மாற்றப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டவர். அரசியல் அமைப்பு சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க உறுதிப்படுத்த வெகு மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், விருகம்பாக்கம் பகுதி குடியிருப்போர் சங்கத் தலைவராக தொடர்ந்து உற்சாகமாக செயல்பட்டு வருபவர். தனியார் பள்ளிகள் நிகழ்ந்த கட்டண கொள்ளையை தடுக்க பெற்றோர்கள் தங்கள் உரிமைகளுக்காக உரத்து குரல் எழுப்ப ஏதுவாக மாணவர் பெற்றோர் கூட்டமைப்பை முன்னெடுத்தவர். பறவைகள், விலங்குகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது வீட்டில் பறவைகள், நாய் ஆகியவற்றை ஆர்வத்துடன் வளர்ப்பவர். குடியிருப்பு பகுதியில் பூங்காக்கள் செயல்படுவது பராமரிப்பது ஆகியவற்றில் முன் நிற்பவர். அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், பொது போக்குவரத்து போன்ற அரசின் செயல்பாடுகள் குடியிருக்கும் பகுதியில் முழுமையாக செயல்படுவதற்கு வலுவாக குரல் கொடுத்து வருபவர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ, நிலபிரபுத்துவ சுரண்டல் முறைகளுக்கு எதிராக, இந்திய நிலப்பரப்பில் பொதுவுடமை இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமைமிகு தோழர் செ.அருமைநாதன். தோழர்கள் மத்தியில் தோழமை பேணுவதிலும், அன்பு மிகுந்து உபசரிப்பதிலும் முதன்மையானவர். மக்கள் பணியில் இடையறாது களம் காணும் செங்கொடி தோழர் செ. அருமைநாதன் – கு. மேரித் தெரஸ் இணையருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram