மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கைவினைஞர் முன்னேற்றக் கட்சி ஆதரவு
3 Apr 2026, 5:05 pm
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கைவினைஞர் முன்னேற்றக் கட்சி ஆதரவு</strong></p>
<p>சென்னை, ஏப். 3- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கைவினைஞர் முன்னேற்றக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொன். கனகராஜ் தலைமையில் நிர்வாகிகள் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வரு கை தந்தனர். அவர்கள், பிப்ரவரி 22 அன்று சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழு சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில் 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகியிடம் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற முழு முயற்சியுடன் தேர்தல் பணியாற்றுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். நிகழ்வின்போது கைவினைஞர் முன்னேற்றக் கட்சி அமைப்பாளர் சி. உமாபதி, தலைவர் பாலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
