பிரசவக் சிக்கல்களை சரி செய்ய செயற்கை தொப்புள் கொடி ஆய்வு
10 Jan 2026, 12:25 pm

பிரசவக் சிக்கல்களை சரி செய்ய செயற்கை தொப்புள் கொடி ஆய்வு

தொப்புள் கொடி என்பது கருவுறும்போது மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. அது வேகமாக வளர்ந்து ஒரு சிறிய தட்டு அளவிற்கு ஆகிறது. ஒவ்வொரு குழந்தை வளர்வதற்கும் தொப்புள் கொடி அவசியம். உலகளவில் 2023இல் பிரசவ கோளாறுகளால் 260,000 தாய் இறப்பும் பல இலட்சக்கணக்கான சேய் இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 5இலிருந்து 8 சதவீதம்வரை தொப்புள்கொடி சரியாக வேலை செய்யாததால் நிகழ்கின்றன. மேலும் தாய்க்கு இதயநோய், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் தொடக்க காலத்தில் ஆஸ்பிரின் மாத்திரைகளை குறைவாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில நேரங்களில் இதை தடுக்கலாம். ஆனாலும் எல்லோருக்கும் தடுப்பதற்கான திறனான வழியை அறிவியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொப்புள் கொடி வளர்ச்சி குறித்த முக்கிய விவரங்கள் இல்லை. கருவுற்றிருக்கும்போது அதை ஆய்வு செய்வது கடினம்; ஏனென்றால் மாதிரிகளை சேகரித்தால் தொற்று ஏற்படலாம் அல்லது குறைப்பிரசவம் நடக்கலாம். பிரசவத்திற்கு பின்னான தொப்புள்கொடி அதனுடைய தொடக்க நிலையிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். விலங்குகளின் தொப்புள்கொடி மனிதர்களுடயதிலிருந்து மாறுபட்ட ஒன்றாக உள்ளது. எனவே அதனை ஆய்வு செய்வதால் குறுகிய பலன்களே கிடைக்கும். நேச்சர் கம்யூனிகேசன்ஸ் இதழில் வெளிவந்துள்ள ஒரு புதிய ஆய்வில் முதன்முறையாக 3டி முறையில் உண்டாக்கப்பட்ட குறு தொப்புள்கொடி குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிளசெண்டல் ஆர்கனாய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவை இதற்கு முந்தைய முயற்சிகளிலிருந்து முன்னேற்றமாகும். இதன் மூலம் பிரசவம் குறித்து ஆய்வு செய்ய புதிய வழிகள் கிடைக்கும். பிரீகெளாம்ப்சியா போன்ற பிரசவச் சிக்கல்கள் குறித்து அறிவியலாளர்கள் தெளிவு பெறலாம். இந்த ஆய்வாளர்கள் தொப்புள்கொடியிலிருந்து டிரோப்போபிளாஸ்ட் எனும் செல்களை எடுத்து செயற்கை ஜெல்களுடன் கலந்து 3டி அச்சு முறையில் சிறு துளிகளாக வார்த்தனர். அவை குறு உறுப்புகளாக வளர்ந்தன. அவற்றை இதற்கு முன் செய்யப்பட்ட முறைகளில் வளர்ந்தவற்றுடன் ஒப்பிட்டதில் இவை வேறுபட்ட செல்களாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. இவை மனித தொப்புள்கொடி திசுக்களுடன் ஒத்திருந்தன. பிரீஎக்ளாம்ப்சியா பிரசவ சிக்கல் உள்ள பெண்களின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சமிக்கைகளுக்கு உயிரி முறையில் அச்சிடப்பட்ட குறு உறுப்புகளை எதிர்கொள்ள வைத்து அவற்றிற்கேற்ற சிகிச்சை முறைகளையும் சோதனை செய்துள்ளார்கள். இதனை மேலும் விரிவு செய்து செல்களிலுள்ள மரபணுக்களை எடிட் செய்து கருவுறுதலின் போது நடைபெறும் இயக்கங்களை கண்டறியலாம். அப்போது ஏற்படும் தொற்றுகளையும் அதற்கான மருந்துகளையும் சோதனை செய்யலாம். விலங்கு சோதனையில்லா இம்முறையில் எதிர்காலத்தில் பிரசவச் சிக்கல்களை முன்கூட்டியே அறியவும் தடுக்கவும் சிகிச்சை தரவும் இயலும். சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப இயலாளர் கிளேர் ரிச்சர்ட்ஸ், லானா மெக்கிளமெண்ட்ஸ் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த கட்டுரை சயின்ஸ் அலர்ட்டில் வந்தது.