தமிழகத்தில் 500 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி! ‘ஜியோ’-வுடன் இணைந்த புதிய திட்டம்
29 Jan 2026, 3:04 pm
<p><strong>தமிழகத்தில் 500 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி! ‘ஜியோ’-வுடன் இணைந்த புதிய திட்டம் </strong></p>
<p>சென்னை, ஜன. 29 - தமிழகப் பள்ளிகளில் ஜியோவின் புதிய செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜியோ மற்றும் கூகுள் ஜெமினி இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கல்வித் துறையில் புகுத்து கின்றன. இதன் முக்கிய அங்கமாக, ‘ஜியோ ஏஐ கிளாஸ்ரூம்’ என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி வாடிக்கையாளர்களுக்கு சுமார் 35 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்புள்ள ‘கூகுள் ஜெமினி ப்ரோ’ சந்தா 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படு கிறது. இந்தச் சலுகையின் மூலம் 2 டெரா பைட் அள விலான ‘கிளவுட் சேமிப்பகம்’, உயர்தரப் படங்களை உருவாக்கும் ‘நானோ பனானா ப்ரோ’ மற்றும் வீடி யோக்களை உருவாக்கும் ‘வியோ 3.1’ போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்த முடியும்.</p>
