இராமேஸ்வரம் தீவு பகுதிகளில் கடல் உயிரினங்களை பாதுகாக்க செயற்கை பவளப்பாறைகள்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>இராமேஸ்வரம் தீவு பகுதிகளில் கடல் உயிரினங்களை பாதுகாக்க செயற்கை பவளப்பாறைகள்</strong></p>
<p>இராமேஸ்வரம், மார்ச் 26- மீன்கள் வாழ்வதற்கான உறைவிடமாகவும், இனப் பெருக்கம் செய்யவும், பவளப்பாறைகளில் படியும் பாசி களை உண்டு வாழ்வதற்கு ஏற்ற இடமாக பவளப்பாறை கள் உள்ளன. மீன்பிடி தொழிலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது, பிளாஸ்டிக் கழிவுகள் பவளப்பாறைகள் படிந்து கிடப்பது, விற்ப னைக்காக வெட்டி எடுத்து அழிப்பது போன்ற செயல் களால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் பிரதமர் நீர்வள மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 கோடி செலவில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, அக்காள்மடம், பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் சுமார் 26,000 செயற்கை பவளப்பாறைகளை கடலுக்குள் அமைக்க உள்ளனர். தற்போது, பாம்பன் குந்துகால் மீன் இறக்குதளம் மற்றும் தங்கச்சிமடம் மீன் இறக்கு தளத்தில் இருந்து கிரேன்கள் மூலம் கப்பல்களில் ஏற்றி கடலுக்கு கொண்டு சென்று இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செயற்கை பவளப்பாறைகள் மூலம் மீன்கள் தங்களின் வாழ்விடத்தை உருவாக்கி இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வது இந்த திட்டத்தின் நோக்கம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.</p>
