முந்தய பக்கம்

தமுஎகச சார்பில் கலை மாலை நிகழ்வு

8 Mar 2026, 3:42 pm
தமுஎகச சார்பில் கலை மாலை நிகழ்வு
<p><strong>தமுஎகச சார்பில் கலை மாலை நிகழ்வு</strong></p> <p>கோவை, மார்ச் 8- தமிழரின் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமுஎகச சார்பில் கோவை, மசக்காளிபாளையம் மைதானத்தில் கலை மாலை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், கலை மாலை நிகழ்வு மசக்காளிபாளையம் மைதானத்தில் நந்தலாலா, கரிசல் குயில் கிருஷ்ணசாமி நினைவு மேடையில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.கரீம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் தி.மணி துவக்கவுரையாற்றினார். மண்ணிசை கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற இந்நிகழ்வில், கவிஞர் இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் மற்றும் உடுமலை துரையரசன் ஆகியோர் பாடல்கள் இடம்பெற்றன. தொடர்ந்து பரதநாட்டியம், கரகாட்டம், காவடி ஆட்டம், நிகர் கலைக்குழுவினரின் போர் பறையிசை, சுல்தான் பேட்டை இதயம் கலைக்குழுவின் நாட்டுப்புற கும்மி, நிரஞ்சனாவின் சாக்ஸாபோன், மேஜிக் கலைஞர் ஷாகுல்-ன் மேஜிக் மற்றும் மெண்டலிசாம் ஷோ உள்ளிட்ட நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இந்நிகழ்ச்சியின், &lsquo;வெறுப்பின் கொற்றம் வீழ்க&rsquo; என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், &ldquo;அன்பே அறமென வாழ்க&rdquo; என்ற தலைப்பில் சுகிசிவம் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழரின் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எண்ணற்ற மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் தங்க முருகேசன், வெ. மைதிலி, ஜின்னா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். முடி வில், மாவட்டத் தலைவர் மு.காளிநாதன் நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram