தேர்தல் அறிக்கையில் கலை - இலக்கியக் கோரிக்கைகளைச் சேர்க்க வேண்டும்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>தேர்தல் அறிக்கையில் கலை - இலக்கியக் கோரிக்கைகளைச் சேர்க்க வேண்டும்</strong></p>
<p>அரசியல் கட்சிகளுக்கு தமுஎகச சாசனம்! சென்னை, மார்ச் 24- தமிழக சட்டமன்றத் தேர் தலில் போட்டியிடும் அரசி யல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கலை, இலக்கி யச் சமூகத்தின் கோரிக்கை சாசனத்தைத் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கம் (தமுஎகச) சென்னையில் செவ்வாயன்று (மார்ச் 24) வெளியிட்டது. செய்தியாளர் சந்திப்பில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பி ரன், மாநிலத் துணைத்தலை வர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் இக்கோரிக்கைகளை விளக்கினர். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு: கொள்கை மற்றும் பண்பாட்டு உரிமைகள் •அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை பொறிக்கப்பட்ட தூண்களை அரசு அலுவல கங்கள், கல்வி நிலையங் கள் மற்றும் பொது இடங்க ளில் அமைக்க வேண்டும். •வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991-ஐ மாநில அரசு மீறாது என்பதை உறுதிப் படுத்த வேண்டும். வந்தே மாதரம் பாடலைத் தேசிய கீதத்திற்கு இணையாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். •தமிழகத்தில் உள்ள ஒன் றிய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் தமிழ் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப் பட வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நலன் • சென்னையில் புத்தகப் பூங்கா அமைக்க வேண்டும்; இதேபோல் மற்ற பெருநகரங்களிலும் புத்தகப் பூங்காக்கள் விரிவு படுத்தப்பட வேண்டும். • எழுத்தாளர்கள் தங்கிப் படைப்புகளை உருவாக்க உலக நாடுகளில் உள் ளது போன்ற உண்டு உறை விடப் பள்ளியை உரு வாக்க வேண்டும். •நலிந்த மூத்த கலைஞர் களுக்கான மாதாந்திர உத வித்தொகையை இரட்டிப் பாக்க வேண்டும். அகவை முதிர்ந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாரபட்ச மின்றி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். •தமிழகத்திற்கென்று பிரத் யேக ஓடிடி (OTT) தளம் தொடங்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலை மற்றும் நூலக மேம்பாடு • 6 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்களின் நலன் காக்க நாட்டுப்புறக் கலை களுக்கான பல்கலைக்கழ கம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்துக் கலை ஞர்களையும் நலவாரியத் தில் சேர்க்க வேண்டும். •நூலகங்களுக்கு ஆண்டு தோறும் நூல்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட வேண்டும். • தொல்லியல் அகழாய்வு நடைபெறும் இடங்களை ஒருங்கிணைத்துச் சிறப்புச் சுற்றுலாத் திட்டம் அறி விக்கப்பட வேண்டும். •திருநர்கள் உரிமைப் பாதுகாப்புத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்; கலைக் கல்வி நிறுவனங்களில் தகுதியான திருநர்களைப் பணியமர்த்த வேண்டும். திமுக அரசு முந்தைய தேர் தலின் போது தமுஎகச முன் வைத்த கோரிக்கைகளை ஏற்று, மதுரை மற்றும் திருச்சி யில் பிரம்மாண்ட நூலகங் களை அமைத்துள்ளதை யும், மாநிலத் தனித்துவக் கல்விக் கொள்கைக்கான பணிகள் நடைபெற்று வரு வதையும் தலைவர்கள் இத ன்போது சுட்டிக்காட்டினர். மதச்சார்பற்ற முற் போக்குக் கட்சிகளின் அணி யைத் தமுஎகச ஆதரிக்கும் என்றும், கலை இலக்கிய வாதிகளின் கூட்டறிக்கை வாயிலாகத் தங்களது ஆதர வை வெளிப்படுத்த உள்ள தாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநிலப் பொருளாளர் சைதை ஜெ. உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
<p> </p>
