திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 32 மையங்களில் டிச.7ல் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 32 மையங்களில் டிச.7ல் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள்</strong></p>
<p>திருப்பூர், டிச.3- திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் 32 மையங்களில் டிசம்பர் 7 ஆம் தேதி மாணவ, மாணவியர் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடைபெறு கின்றன. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் ஆகியவை சேர்ந்து நடத்தும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2026 திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வரும் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு, மாணவ மாணவி யருக்கான கலை இலக்கிய திறனாய் வுப் போட்டிகள் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகி றது. மூன்று பிரிவுகளில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறக்கூடி யவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300, மூன்றாம் பரிசு ரூபாய் 200 மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு ஓவியப்போட்டி மட்டும் நடைபெறும். எனக்குப் பிடித்த விலங்கு, பூந்தோட் டம், தேசத் தலைவர், திருவிழா, இன்பச் சுற்றுலா ஆகிய தலைப்புகளில் ஏதே னும் ஒன்றில் ஓவியம் வரையலாம். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிக ளுக்கு ஓவியப் போட்டிக்கு சாலை விதி கள், எனது குடும்பம், ஓடியாடி விளை யாடு, விண்வெளி என்னும் அதிசயம், நூலகமே என் வீடு என்ற தலைப்புக ளில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியம் வரையலாம். அதேபோல் இந்தப் பிரிவில் கட் டுரைப் போட்டியில், “சாதிக்கும் பெண் கள், கல்வியே எதிர்காலம், போரில்லா உலகம், கைபேசி: வரமா? சாபமா? எனக்குப் பிடித்த புத்தகம் எனும் தலைப் புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட் டுரை எழுதலாம். ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாண விகளுக்கு ஓவியப் போட்டிக்கு, உழவே உயர்வு, மாசில்லா உலகம், கனவு 2050, டிஜிட்டல் உலகம், சிறகடிக்கும் பறவைகள் ஆகிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைப் போட்டிக்கு செம்மொழியான தமிழ் மொழியாம்!, நீரின்றி அமையாது உலகு, உணவும், உடல் நலமும், கையெட்டும் தூரத்தில் இலக்கு, உலகை ஆளும் ஏ ஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கட் டுரை வரையலாம். இந்தப் பிரிவு மாணாக்கர்களுக்கு, போட்டி நடைபெறும் நாளில் கவிதை போட்டிக்கான தலைப்பு வழங்கப்ப டும். ஓவியப் போட்டிகள் காலை 10 முதல் 11 மணி வரையும், கட்டுரைப் போட்டி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், கவிதைப்போட்டி நண்பகல் 12 மணி முதல் பகல் ஒரு மணி வரையும் நடைபெறும். விருப்பமுள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பங்கேற்க லாம். இந்த போட்டியில் எழுதத் தேவை யான தாள்கள் மற்றும் படம் வரைவ தற்கான சார்ட் ஆகியவை தரப்படும். போட்டியின் போது தான் எழுதித் தர வேண்டும், குறிப்புகளையோ, ஏடுக ளையோ பார்த்து எழுதக் கூடாது, கட் டுரை அதிகபட்சம் நான்கு பக்கம், கவிதை அதிகபட்சம் இரண்டு பக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்க ளது பெயர், வகுப்பு, பள்ளி, தொலை பேசி எண் ஆகிய விபரங்களை தெளி வாக குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவியர் போட்டி நடைபெறும் அரங் கிற்கு காலை 9 மணிக்குள் வந்திருக்க வேண்டும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. திருப்பூரில் போட்டி நடைபெறும் இடங்கள்: திருப்பூர் ஜெய்பாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, என்.ஆர்.கே புரம் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளி, நொய்யல் வீதி அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி மாநகராட்சி துவக்கப் பள்ளி, வாவிபாளையம் அரசு உயர்நி லைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பூலுவபட்டி மாநக ராட்சி துவக்கப்பள்ளி, 15 வேலம்பாளை யம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மங்க லம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நல்லூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே செட்டிபாளை யம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாண்டி யன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சி நடுநி லைப்பள்ளி, மன்னரை மாநகராட்சி நடு நிலைப்பள்ளி ஆகிய 18 மையங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும். இது தவிர, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக் குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொங்கலூர் பி. வி.கே.என் மேல்நிலைப்பள்ளி, உடு மலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நி லைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, தாராபுரம் என்சிபி மேல்நி லைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நி லைப்பள்ளி, காங்கேயம் பழைய கோட்டை ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத் தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 14 பள் ளிகளிலும் இந்த போட்டிகள் நடைபெ றும். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகத் திரு விழா வளாகத்தில் ஜனவரி 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெ றும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங் கப்படும். இத்துடன் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் மாணவ, மாணவிக ளுக்கு தினமும் குழுக்கள் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் 500 மதிப்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் திருப்பூர் புத்தகத் திருவிழா குழுவினர் தெரிவித் துள்ளனர்.</p>
