விளையாட்டு
27 May 2026, 9:06 pm

உள்நாட்டிலேயே நிறவெறியுடன் பேசும் அர்ஷ்தீப் சிங்

பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருப்பவர் அர்ஷ்தீப் சிங் (27). ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளை யாடி வருகிறார். இந்திய அணிக்கு அபாரமாக பந்துவீசியது போலவே, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் தொடர்ச்சி யாக சிறப்பாக பந்துவீசி வந்தார். இந்நிலையில், விளையாட்டைப் போல சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடிய அர்ஷ்தீப் சிங், தொடர்ச்சியாக சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் ரிங்கு சிங்கின் (இந்திய அணியில் விளை யாடும் வீரர் - ஐபிஎல்லில் கொல்கத்தா) தந்தை இயற்கை எய்திய அதே நாளில், சிரித்துக் கொண்டு கொண்டாடு வதுபோல் ஒரு வீடியோவை போட்டு சர்ச்சையில் சிக்கினார். இது நண்பர் களுக்கு இடையிலானது என்று அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் திலக் வர்மாவுடன் (இந்திய அணியில் விளையாடும் வீரர் - ஐபிஎல்லில் மும்பை) வீடியோ எடுத்த போது, அவரது நிறத்தை வைத்து மட்டம் தட்டி பேசி வீடியோ வெளி யிட்டார் அர்ஷ்தீப் சிங். இது நிறவெறி நிறைந்த பேச்சு ஆகும். சொந்த நாட்டிலேயே சக வீரரை நிறவெறியுடன் இழிவுபடுத்தி பேசும் அர்ஷ்தீப் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டனங்களுடன் கோரிக்கை குவிந்தன. இதனால் அர்ஷ்தீப் சிங் மீது பஞ்சாப் அணி நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, “நிறவெறி பேச்சு தொடர்பாக உடனே மன்னிப்பு கேட்டு பதிவை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியிருக் கிறார்கள். ஆனால் அர்ஷ்தீப் சிங் இதனை ஏற்கவில்லை. இதனால் இந்த நிறவெறி அடாவடி விவகாரத்திற்கு அர்ஷ்தீப் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும் என பஞ்சாப் அணி நிர்வாகி கள் ஒதுங்கியுள்ளனர். மேலும் அர்ஷ்தீப் சிங்கை டிரேடிங் செய்யவும் (வேறு அணிக்கு மாற்ற) நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் அணி இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அப்படியே விட்டுவிடக் கூடாது; உள்நாட்டிலேயே நிறவெறி யுடன் பேசும் அர்ஷ்தீப் சிங் மீது பிசி சிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூகவலைத்தளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.

ஈரான் கால்பந்து வீரர்கள் எங்கள் நாட்டில் தங்கிக்கொள்ளலாம் மெக்சிகோ ஜனாதிபதி அழைப்பு

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. போர் பதற்றத்துக்கு இடையே ஈரான் தேசிய கால்பந்து அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. ஈரான் விளையாடும் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. போட்டியில் விளை யாடலாம் ; ஆனால் எங்கள் நாட்டில் தங்கக்கூடாது என அமெரிக்கா ஈரானுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே போல அமெரிக்காவில் தங்க எங்களுக்கு விருப்பம் இல்லை ; எங்கள் நாட்டின் உயர் தலைவரை கொன்ற அமெரிக்க மண்ணில், எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்று ஈரான் கால்பந்து சம்மேளனம் கூறியுள்ளது. இதனால் போட்டிக்கு இடையே ஈரான் வீரர்களை மெக்சிகோ வில் தங்க வைக்க உதவ முடியுமா? என அந்நாட்டு அரசாங்கத்திடம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கோரியது. இதற்கு மெக்சிகோ அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இதுதொடர்பாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்,”ஈரான் தேசிய அணி அமெரிக்காவில் இரவு நேரங்களில் தங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறி, பிபா பிரதிநிதி ஒருவர் தனது நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டார். ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் போட்டிக்குப் பின்னர் தங்கலாமா? எனக் கேட்டார். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு இதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஈரான் வீரர்கள் எங்கள் நாட்டில் தங்கிக்கொள்ளலாம்” என அவர் தெரிவித்ததாக காசின்பார்ம் செய்தி முகமையின் செய்தியாளர் கூறினார். முன்னதாக, ஈரான் அணியின் பயிற்சி முகாம் அமெரிக்காவின் அரி சோனாவில் உள்ள டக்சனிலிருந்து, சாண் டியாகோவிற்கு தெற்கே உள்ள மெக்சிகோ எல்லை நகரமான டிஜுவானாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.