துணை ராணுவ படை வீரர்கள் வருகை
10 Mar 2026, 3:51 pm
<p><strong>துணை ராணுவ படை வீரர்கள் வருகை</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 10- தேர்தலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படா மல் அமைதியான முறையில் நடத்துவதற் காக நாமக்கல் மாவட்டத்திற்கு துணை ராணுவ படை வீரர்கள் வந்தடைந்தனர் நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி) சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்காக 1500க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிலை யில், ராசிபுரம் (தனி) தொகுதியில் 13 வாக்குச் சாவடிகளும், சேந்தமங்கலம் (ப.கு.) தொகு தியில் 30 வாக்குச் சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 17 வாக்குச் சாவடிகளும், பர மத்தி - வேலூா் தொகுதியில் 42 வாக்குச் சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதி யில் 18 வாக்குச் சாவடிகளும், குமாரபாளை யம் தொகுதியில் 60 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 180 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியுடன் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்ஒருபகுதியாக செவ்வாயன்று துணை ராணுவ படையினர் 30 க்கும் மேற் பட்டோர் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர், குமாரபாளை யம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் உள்ள வாக்கு சாவடி மையங்க ளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையம் காவல் துணை கண்கா ணிப்பாளர் கௌதம் வீரர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். தேர்தலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்துவதற்காக துணை ராணுவ வீரர்கள் வருகை தந்திருப்பதாகவும், மேலும் 15 முகாம்களை சேர்ந்த துணை ராணுவ வீரர் கள் வர இருப்பதாக காவல்துறை கண்கா ணிப்பாளர் கௌதம் தெரிவித்தார். கோவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு முதற்கட்டமாக 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் ஒதுக்கப் பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரப் பகுதிக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), விரைவு அதிரடிப்படை (RAF) மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை என மொத்தம் 150 வீரர்கள் இந்த அணி வகுப்பில் பங்கேற்றனர். மாநகரத் தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த அணி வகுப்பு, சுமார் 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்து சென்றது. வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி ஜனநாயகக் கட மையை ஆற்றும் வகையில், மாநகரின் முக்கிய பகுதிகளில் தினசரி ரோந்துப் பணி களை மேற்கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது.</p>
