தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு

9 Apr 2026, 5:30 am
புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு

புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு

தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் பேட்டி. புதுச்சேரி, ஏப்.5- மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஏப்.6) காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 209 பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கலை, வரலாறு அடிப்படையில் ஜினூர், வடபழனி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளிகளில் தனித்துவத்தமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். பெண்களை நிர்வகிக்கும் வாக்குச்சாவடி. பெண்கள் 30 வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பர்.

புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச் சாவடிகளையும் நிர்வகிப்பார்கள். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர். மாணவர், தன்னார்வலர்கள் 2200 பேர் ஈடுபடுவர்.

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் இருந்து சில சேர்களில் அழைத்து வந்து வாக்கு செலுத்த உதவுவது, மொபைல்போன் டெபாசிட் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்வர். மைக்கோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுவர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.