மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து வாக்கு செலுத்த ஏற்பாடு
12 Mar 2026, 4:20 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து வாக்கு செலுத்த ஏற்பாடு</strong></p>
<p>உடுமலை, மார்ச் 12– மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிப்பது தொடர்பாக உடுமலை வட்டாட்சியர் அலுவ லகத்தில் வியாழனன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. வரும் தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் முறையை தேர்தல் ஆணையம் செயல் படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 40 சதவீதத்துக்கும் அதி கமான மாற்றுத்திறன் உடையவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வரா மல் தங்கள் வீடுகளில் இருந்தே வாக்கு செலுத்தலாம். உடு மலை சட்டசபை தொகுதியில் 1,179 மாற்றுத்திறனாளி வாக்கா ளர்கள் உள்ளர்கள். இந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்த படியே வாக்கு செலுத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வட்டாட்சியர் கெளரி சங்கர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், உடுமலை நகரமன்ற உறுப் பினர் கண்ணன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
