தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனத்துறை பாதுகாப்போடு மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

17 Mar 2026, 3:26 pm
வனத்துறை பாதுகாப்போடு மக்கள் வாக்களிக்க ஏற்பாடு
<p><strong>வனத்துறை பாதுகாப்போடு மக்கள் வாக்களிக்க ஏற்பாடு</strong></p> <p>உதகை, மார்ச் 17- வனப்பகுதி மிகுந்த நீலகிரி மாவட்டத்தில், வனவிலங்கு அச் சுறுத்தல் உள்ள பகுதிகளில் &nbsp;அமைந்துள்ள வாக்குச்சாவடிக ளுக்கு பொதுமக்களை வனத் துறை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட தேர் தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண் ணீரு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய &nbsp;மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில், 6120 &nbsp;தேர்தல் அலுவலர்கள் பணி யாற்றி வரும் நிலையில், மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 736 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அதில் 74 வாக்குச்சாவடி பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி &nbsp;பவ்யா தண்ணீரு திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித் தார். மேலும், அவர் கூறுகையில், உதகை சட்டமன்ற தொகுதியில் 1,88,064 வாக்காளர்களும், கூடலூர் &nbsp;சட்டமன்ற தொகுதியில் 1,84663 வாக்காளர்களும், குன்னூர் சட்ட மன்ற தொகுதியில் 1,76663 வாக் காளர்களும் உள்ளனர். நீலகிரி 55 &nbsp;சதவிகிதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டம் என்பதால், வனப்பகுதி அருகே அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் 24 மணி நேரம் காவல்துறையினருடன் கூடுதலாக வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள். வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதி யில் வாக்காளர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் வாகனங் களை ஏற்பாடு செய்து வாக்காளர் களை பாதுகாப்பாக அழைத்து &nbsp;வந்து வாக்களித்த பின் மீண்டும் &nbsp;பாதுகாப்பாக தங்கள் கிராமங்க ளில் இறக்கி விடப்படுவார்கள். மேலும், சுற்றுலா மாவட்டம் என்ப தால் உதகைக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் 50 ஆயிரத்திற் கும் கீழ் பணம் கொண்டு வர வேண் டும். தேவைக்கேற்ப டிஜிட்டல் பண &nbsp;பரிவர்த்தனை மேற்கொள்ள வேண் டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.