திருச்சி விரைவு செய்திகள்
26 Mar 2026, 2:46 pm

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது

தேனி, மார்ச் 26- சின்னமனூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளி ஒருவரை விரட்டி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்தது. இது தொடர்பாக சம் பந்தப்பட்டவரை கைது செய்து காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர். சின்னமனூர் சாமிகுளத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (38). இவர் கட்டிடத் தொழிலில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் வியாழ னன்று இவர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று கொண்டிருந்தார். மருத்துவ மனை வளாகத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்த போது கோட்டூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வம்(44) இவரை அரிவாளால் வெட்ட முயன்றார். சசிகுமார் பயந்து ஓடவே, அவரை விரட்டிச் சென்று கை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டினார். காயத்துடன் கீழே விழுந்து கிடந்த சசிகுமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தகவலின் பேரில் சின்னமனூர் காவல்துறையினர் அங்கு வந்து செல்வத்தை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், செல்வம் மனைவி முனீஸ்வரி யுடன் சசிகுமார் பழகி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரச்சனை முற்றிய நிலையில் சசிகுமாரை பின் தொடர்ந்து வந்து அரிவாளால் வெட்டி யுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

லாரி ஓட்டுநரை குத்தி கொல்ல முயற்சி போடியில் 2 பேர் கைது

தேனி, மார்ச் 26- போடியில் லாரி ஓட்டுநரை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். போடி ஜெயம் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேஷ்குமார் (40). லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் போடி தர்மராஜ் நகரில் உள்ள அரசு மதுக்கடையில் மது வாங்க சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் மது வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் திருநாகேஸ்வரன் (30) என்பவர் மீது மோதி விட்டார். இதில் இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற் பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர். ராஜேஷ்குமார் வீட்டிற்கு செல்வதற்காக மதுக்கடை அருகே உள்ள தனியார் காலியிடத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திருநாகேஸ்வ ரன், இவரது தம்பி மாதேஸ்வரன் (29), சந்திரன் மகன் ஜெயச்சந்திரன் (26) ஆகியோர் சேர்ந்து ராஜேஷ்குமாரை வழி மறித்துள்ளனர். மதுபாட்டிலால் தாக்கியும், உட லில் பல இடங்களில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பலத்த காயமடைந்த ராஜேஷ் குமாரை இவரது மனைவி கெளரி, ராஜேஷ்குமாரின் தாயார் ஆகியோர் மீட்டு போடி அரசு மருத்துவ மனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீசார் திருநாகேஸ்வரன், மாதேஸ்வரன், ஜெயச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து திருநாகேஸ்வரன், ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மாதேஸ்வரனை தேடி வரு கின்றனர்.

விபத்தில் முதியவர் பலி

நத்தம், மார்ச் 26- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திரா பட்டியைச் சேர்ந்தவர் சிலு வைமுத்து (70). இவர் புத னன்று இரு சக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந் தார். அப்போது பின்னால் தொந்திலிங்கபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லா மல் சிலுவைமுத்து வியாழ னன்று உயிரிழந்தார்.

குட்லாடம்பட்டியில் அனுமதியின்றி கோவில் கட்ட தடை மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு

மதுரை, மார்ச் 26- மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி கிராமத்தில் முறையான அனுமதி இன்றி கோவில் கட்டும் பணிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கோவில் கட்டுமானப் பணிகளை தொடர இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மனோஜ் குமார் தாக்கல் செய்த மனுவில், “குட்லாம்பட்டி கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை பல ஆண்டுகளாக எந்த பாகுபாடும் இன்றி நடத்தி வருகிறோம். இந்நிலை யில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சமூ கத்திற்காக மட்டும் தனி கோவில் கட்ட நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்கான எந்தவித அரசாணை அல்லது அனுமதியும் பெறா மல் கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆகவே அந்த பணிகளை தடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கூறி யிருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு, கோவில் கட்டு மானப் பணிகளை தொடர இடைக்கால தடை விதித்ததுடன், சம்பந் தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

மேலூர் அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம்

மதுரை, மார்ச் 26- மதுரை மாவட்டம் மேலூர் - கொட்டாம் பட்டி அருகே அய்யாப்பட்டி நான்கு வழிச் சாலையில், சென்னை நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் இருந்த கடை மீது மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியானார். அவ ரது குழந்தைகள் மற்றும் மனைவி உள்ளிட்ட 4 பேர் பாடுகாயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சென்னை யில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் மேற் கொண்டார். இந்நிலையில், காரை சுடலைமணி யின் மாமனார் கருப்புசாமி ஓட்டி வந்த நிலையில், கார் மேலூர் - கொட்டாம்பட்டி அருகே அய்யாப்பட்டி விலக்கு நான்கு வழிச் சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்திருந்த ராணுவ வீரரான சுடலை மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த அவரது மனைவி பிரியா மற்றும் 6 வயதான அவ ரது மகன் சுமித், 4 வயதான மகள் மகிஷாஶ ்ரீ, காரை ஓட்டி வந்த மாமனார் கருப்புசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி காவல் துறையினர் அருகில் இருந்தவர்கள் உதவி யுடன் விபத்தில் சிக்கிய குழந்தைகள் உட் பட 4 பேரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.